பாதை மறந்த பயணம் சித்திரந் தீர்த்த சிறு வானம் போல சிவந்து நிற்கும் உன் கண்ணங்கள் என்னை வர்ணத்தின் வனப்பை வர்ணிக்க வைக்குதடி, தீண்டாத உன் தேகங்களும் தீராத என் தாகங்களும் பாராமல் போகும் உன் கடை விழி பார்வைக்காக ஏங்குதடி, உன் கண்ணம் கண்ட என் இதழ்களும் வாசிக்குமே முத்த கீதங்களை... உன் விழியோரம் வடிந்தொழுகும் ஒரு துளி நீரும் பேராற்றல் பெற்று ஆழியையே அடக்குமடி, உன் சின்னஞ்சிறு செவ்விதழைத் தொட்டுச் செல்லும் மழை துளி கூட மண்ணைத் தொட யோசிக்குதே, நான் மட்டும் எப்படி? நான் மழை துளியன்று, உன் உயிர் துளி... கடற்கரையோரம் தன்னந்தனியாக என் கால்கள் போகிறது நீ என் துணையாகும் நாளை நோக்கி, நீ என்னோடு இல்லாமையால் தொலைவில் தெரியும் கதிரவனும் தூங்கச் செல்கிறான் கோபத்தோடு, வெளிச்சம் குறைய வேதனை பெருகியது இங்கு நான் மட்டும் தனியே புது விடியல்