சின்னஞ் சிறு இரகசியமே

  • 21.4k
  • 4.1k

அவள் ஏழு கண்டங்களும் காணாத சின்னஞ் சிறு அதிசயமா? இச்சைகளுக்கு அடங்காத சின்னஞ் சிறு விரகதாபமா? ஆழ்மனதில் லயிக்கும் சின்னஞ் சிறு புளங்காகிதமா? எண்ணங்களில் செல்லரித்துப் போன சஞ்சலமா? சிறுக சேமித்த சின்னஞ் சிறு இரகசியமா? ஊடலுவகையில் கட்டி அணைத்தபடி சின்னஞ் சிறு ஆசைகளை கண்களில் மறைத்து கலவி கொள்ளும் வேளையில், தன்னவனின் வியர்வையில் திளைத்து சின்னஞ் சிறு இரகசியங்களை தனக்குள் புதைத்து புன்னகைக்கிறாள் கண்ணம்மா.கூடல் பொழுதில் சல்லாபங்கள் கடந்து ஊடல் கொள்ளாமல் நித்திரையை அனைத்தபடி கிடக்கிறான் கவிநயன்.அவனை தாழ்வாரத்தின் அருகே படுத்துறங்கும் சின்னஞ் சிறு நாய்க்குட்டியை போல வருடி ரசிக்கிறாள்.அவன் மீது அவளுக்கு சிறுதும் கோபமில்லை, வருத்தமில்லை சிறிதேனும் சலனமில்லை. அவள் என்ன தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்த தேவலோக கண்ணிகையா? பூலோக கண்ணகியா? எவ்வளவு கடிந்தாலும் அவளை ஒரு பொருட்டாக மதியாத போதிலும் எங்கிருந்து வந்தது இந்த பொறுமை. பேராண்மையை கண்டதுண்டு இந்த வையகம் ஆனால் பேருண்மையை மறந்து போனது