பூங்காற்று புதிரானது

  • 16.9k
  • 2.7k

பொதினி மலையடிவாரத்திலிருந்து தென் திசை நோக்கி நெடுவேள் ஆவியின் கட்டளையையும் மீறி கிளம்பியது அந்த பூங்காற்று. தென்றலாக வலுவெடுத்த அந்த பூங்காற்றின் கணத்தில் ஆயிரமாயிரம் பூக்களின் வாசம். குறிஞ்சி பூக்களின் வாசத்தையும் அள்ளி எடுக்க நினைத்தது ஆனால் அதற்கு இன்னும் பதினான்கு அயனம் காத்திருக்க வேண்டும் என்பதால் ஏமாற்றம் கொண்டு சென்றது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் வளர்ந்திருந்த வானுயர விருட்சங்களை ஊடுருவியும் அது நிற்கவில்லை. மார்கழி பனியில் வெய்யோனும் குளிரின் கதகதப்பில் இருந்து மேற்கே செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் அந்த பூங்காற்று மட்டும் எந்த வித சலனங்களுக்கும் ஆட்படாமல் பூம்பாறையின் பாறைகளின் மேல் அமர்ந்து கொண்டு சந்தியா கால வேளையில் மந்தகாசமாய் அந்த பூங்கிராமத்தை பார்த்து கொண்டு இருந்தது.எத்தனை கோடி இன்பமும் துன்பமும் சூழ்ந்தாலும் பூக்களின் வாசத்தை மட்டும் அள்ளி எடுத்து வீசிடும் இந்த பூங்காற்று என்றும் புதிரானது தான். காடு மலைதனில் தவழ்ந்து வரும் பூங்காற்றுக்கு தான் மானுட