DAD'S ARE ALWAYS LIER'S - 1

  • 25.3k
  • 5.6k

அன்று அந்திமாலை 6.00 மணி. அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வேளை , மனமானது சற்று ஓய்வுக்காக ஏங்கிக் கொண்டு இருந்தது. எனது அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் எண்ணத்தில் எனது பையை எடுத்தேன், பின்னிருந்து ஒரு குரல் " அசோக் இரு " நான் திரும்பிப் பார்க்க என்னோடு பணிபுரியும் கதிர் அங்கு நின்றுகொண்டு இருந்தான். "அசோக், சார் உன்னை கூப்பிட்டார் " என்றான். நான் சார் அறையின் கதவை தட்டி, " மே ஐ கம், சார் " என்றேன். அவர் " அசோக் நான் உங்களிடம் கொடுத்த வேலை என்னாச்சி ? " என்றார். அதற்கு நான் " முடிந்தது சார் " என சில காகிதங்களை அவர் முன் நீட்டினேன். அப்பொழுதும் அவர் என்னை விடுவதாக இல்லை. சார் கூரிய வேலைகளை முடிக்கும் போது மணி 8.00 , வீடு சென்று சேரும் போது