ஆணியம் பேசு

  • 16.7k
  • 3.2k

அதை பார்த்த அடுத்த கணமே ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி அந்த நான்கு மாதரசிகள் அவனை நோக்கி வந்தார்கள். அவனுக்கோ அவர்களை பார்த்த அதிர்ச்சியில், சுவாசகுழாயில் பேரடைப்பு மூச்சு தடைப்பட்டது ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்ற போதும் முடியவில்லை. ஒரு நிமிடம் அவன் ஆவி நாதியற்று பறக்க எத்தனித்தது. பதற்றத்தின் உச்ச நிலையின் போது அவனை சூழ்ந்து கொண்டார்கள் அந்த மாதரசிகள். நிறுத்தி நிதானமாகவே ஆரம்பித்தார் தென்மேற்கில் நின்ற பெண்மணி."என்ன ம்ம்.... என்ன !உன் முழியே சரியில்லயே ஆன்ன்...""ஏய் இவன் கிட்ட என்னடி பேச்சுடேய் என்னடா !எங்கள பார்க்குற போன பார்க்குற அப்புறம் சிரிக்கிற போட்டோ எடுக்குற அத பார்த்து சிரிக்கிறம்ம என்ன விசயம்..செருப்பால அடி வாங்கனும்னு ஆசையா இருக்கா?" என்றாள் வடகிழக்கில் நின்றபடியே."அடியேய்,இவனலாம் போலிஸ்ட்ட புடிச்சு கொடுத்து முட்டிக் முட்டி தட்டனும்டீபொம்பள பொறுக்கி நாய்..." என்றபோது அவள் பின்னே சூரியன் மெள்ள மறைய தொடங்கியது . கதிரவனுக்கும் பயமோ என்னவோ யாருக்கு