நிறங்கள் புழங்கும் ஒவியம்

  • 18.1k
  • 3k

இருவரும் இருவேறு துருவங்களாய் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களில் நீர் கசிந்தது. மெள்ள மெள்ள கசிந்து ஓடி அந்த திருச்சபையின் சிவப்புகம்பளத்தில் தெரித்து விழுந்தது. தெரித்த கண்ணீர் துளிகள் கம்பளத்தின் இடுக்குகளில், சிலுவையில் அறையப்பட்டு கிடந்த இயேசுவின் பாதங்களை நோக்கி படர்ந்தது.இருவரும் ஒருவரை ஒருவர் கண்கள் கலங்க பார்த்து கொண்டனர் இப்போது இவர்கள் கண்களில் காதல் மெல்ல கசிந்தது. கசிந்த கண்களில் நிகழ்ந்த சம்பாஷனையின் உரையாடல்கள் மிக நிளமானது அது ஆளமானதும் கூட.அந்த நொடிகள் மெள்ள கடக்கையில் திருச்சபை ஆர்ப்பரித்தது,"வாழ்க்கையின் இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் துணையாயிருந்து, தன் வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும் இந்த தம்பதியர்கள் கடவுளின் முன்னிலையிலும், திருச்சபை முன்னிலையிலும் வாக்களிக்கின்றனர். மேலும் எவ்வித வற்புறுத்தலுமின்றி, முழு மனதுடன் இவ்வாக்குறுதி அளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்." என புனித சேவியர் சொல்லி முடிப்பதற்குள் அற்புத ராஜ்க்கு அப்படி ஒரு ஆனந்தம்."அற்புத ராஜ் ஆகிய நீ கயல்விழியை திருமணம் செய்ய சம்மதமா?""அற்புத