காதல்காரன்

  • 17k
  • 1
  • 5.7k

"ஐ ஹேட் யூ" காதல் உரையாடல்கள் எப்போதும் ரொமாண்டிக்காய் அமைவதில்லை. உணர்ச்சிகள் எல்லை மீறியது. அவனை கட்டுப்படுத்த முடியாமல் அவள் திணறினாள். இதற்கு மேல் அவள் பொறுமை காக்கபோவதாக உத்தேசமில்லை 'பளார்' என அவனை அறைந்தாள். அறைந்த மாத்திரம் பட பட வென பொறிந்தாள்."உனக்கு புரியலயாடா???நீ எனக்கு வேணாம்" திரும்பி போக வேகம் எடுத்தவள் மறுபடியும் அவனை பார்த்து சொன்னாள்."ஐ ஹேட் யூ" இந்த வார்த்தை இன்னும் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான்கு வருடங்கள் கடந்து இன்றும் அந்த வார்த்தைகள் ரகுவரன் நெஞ்சத்தை குடைந்து தமனிகளை ஊடுருவி கொண்டிருக்கிறது. இதோ இந்த இடத்தில் தான் அந்த வார்த்தைகளை அவள் பரிசாக கொடுத்தாள். சஞ்சீவினியை தூக்கிய அனுமனும் கூட அன்று அதை கேட்டிருப்பான். அந்த பரிசினை இன்றும் தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டு ரகுவரன் நடனமாடிக் கொண்டிருக்கிறான்.அன்று வழக்கத்தைவிட கோவிலில் கூட்டம் காணாது இருந்தது. ஜானகி தேவியுடன் ஸ்ரீராமசந்திரமூர்த்தி சாஷ்டாங்கமாக நின்று வைத்த கண் வாங்காமல் அவனே