அன்பெனும் சொல்

  • 9.7k
  • 2.3k

வானத்தை தீண்ட கதிரவன் கதறிய நேரமது காலை பனி மெல்ல படர்ந்த அத்தருணத்தில் ஒரு உரத்த குரல் 'ஜானு' 'ஜானு' என்று. தூங்கி கொண்டிருந்தவளுக்கு உறக்கம் கலையவில்லை இன்னும் உரக்க ஜானு என்றழைக்க மார்கழி குளிர் மெய்ந்த தன்னுடலை அசைத்தாள் ஜானகி கண்ணை திறக்க மனம் மறுக்க உறக்கம் கலைத்தாள்."என்னங்க காலங்காத்தாலே உங்களுக்கு என்ன பிரச்சனை" என்று சொல்லி கொண்டே கடிகாரத்தை நோக்கினாள் ஜானகி ஆறு இரண்டை தழுவி கொண்டிருந்தது."ஒரு பிரச்சனையுமில்ல இன்னிக்கு எனக்கு ஆடிடிங் சீக்கிரம் ஆபிஸ் போனும் எனக்கு லஞ்சு வேனா ஒகேவா" என்றான் பார்த்திபன்"இத நேத்தே சொல்லகூடாதா" என்று நொந்து கொண்டாள் ஜானகி."சொன்ன மட்டும் என்ன பண்ண போற" என்று முனு முனுத்து கொண்டே கைகடிகாரத்தை மாட்டி கொண்டிருந்தான் பார்த்திபன் "என்ன என்ன சொன்னீங்க" என அதட்டல் தொனியுடன் கேட்டாள் ஜானு"ஒன்னுமில்ல சொல்ல எங்க நேரமிருந்துச்சு" என்று அவளை சமாளித்தான்.சமரசமில்லாமல் தனக்குள் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டான் பார்த்திபன்.சரிடா