“காதலிக்கிறேன்! உன்ன காதலிக்கிறேன்! ம்ஹும், எப்படி சொல்லலாம்” கண்ணாடி முன் நின்று தனக்கு தானே பேசி கொண்டிருந்தான் இனியன். “கவிதையா ஒரு லெட்டர் எழுதி கையில கொடுத்துட்டு ஓடி வந்துருவோமோ ச்ச தப்பு எதாவது சொல்லிட்டு தான் கொடுக்கனும்” என பல குழப்பங்களுடன் ஒரு காகிதத்தில் கவிதையை எழுத தொடங்கினான். காதலுக்கு கவிதையை யோசிக்க கவிஞனாக இருக்க வேண்டியதில்லை காதலனாக இருப்பதே போதும் போலும். ஜன்னல் வழியே மென்கரு மேகங்களில் ஓளிந்திருந்த அந்த வெள்ளி நிலவினையே உற்று வெகு நேரம் பார்த்து கொண்டிருந்தான். சட்டென அவள் முகம் தோன்றியது. அது ஒரு மாயை தான் காதலர்களுக்கு இடையில் நடக்கும் மாயை அதனால் தோன்றியிருக்க வாய்ப்புண்டு யார் கண்டது. காகிதத்தை எடுத்து கிறுக்க தொடங்கினான் ஆம் காதல் கிறுக்கல்கள். அவள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வர்ணிக்க எண்ணினான் போலும் ஆகவே அவள் கேசாதிபாதம் பாட தயாரானான். “நான் கம்பனும் அல்ல கண்ணதாசனும்