Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவை சுடும் வெளிச்சம் - 7

இரவு 7

ஜானுவும், வருணும் ஹனிமூன் கொண்டாட்டத்திற்காக சிம்லா சென்று இருந்தனர்.மீராவும் அவள் அம்மாவும் மேற்படிப்பு விஷயமாக அலைந்து கொண்டிருந்தார்கள் .ராம் ஏன் தீபு நாம கீதா கிட்ட ஓபன் ஆகவே நமக்கு சாதகமா வொர்க் பண்ண சொல்லி கேட்டா என்ன. கொஞ்சம் பொறுங்க அவ சுயரூபம் இன்னும் வெளிப்படலை. நான் விசாரித்து கொண்டுதான் இருக்கிறேன். ஜான் கிட்ட பேசி பார்த்தா? இந்நேரம் அவன் கொட்டேஷன் ல பிஸி ஆ இருப்பான். அதுவும் சரிதான். முனீர், ஜான் ,பரந்தாமன், கீதா இவங்கெல்லாம் எப்ப அரெஸ்ட் ஆவாங்க . அந்த பிரேமா கையில தான் இருக்கு எல்லாமே என்றான் ராம்.நாம கவனமா இருக்க வேண்டிய நேரம் இது. நாம இதுல இருக்கோம் அப்படிங்கிறது பரந்தாமனுக்கு தெரிஞ்சுதுனா அவன் சும்மா இருக்க மாட்டான். அவனுக்கு பிஸினஸ் எல்லாம் முக்கியம் இல்லை. கடத்தல் தான் மெயின் வேலை என்றாள் தீபு.நம்மளை பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி இருப்பான். அவன் இன்னும் என்னென்ன பண்ண போறானோ அப்படின்னு கவலையா இருக்கு.டீ சொல்லு தீபு ஒரே தலைவலியா இருக்கு என்றான்.


ஜான் எப்போதும் போல மண்ணடி ஆபீஸ் போயிருந்தான். மாலை வேளை . அவனுக்கு அதிக வேலைகள் இருக்கவில்லை. முனீர் ஊரில் இல்லை. அவனுடைய மெயின் வேலையில் அதிக வருமானமில்லாததால் இப்போது இந்த கொட்டேஷன் வேலையில் இருந்தான். அவனுக்கு பிள்ளைகள் இல்லை. மனைவி மட்டும் தான். ஜானு கத்தி குத்து சம்பவத்தில் அவன் பெயர் அடிபடாதது ஆச்சரியமில்லை. முனீர் எல்லாம் பார்த்து கொள்வான்.முனீருக்கும் பல போலீஸ் அதிகாரிகளுக்கும் கனெக்ஷன் உண்டு. ஜானுக்கு கமிஷன் மட்டுமே.முன்னமே சம்பவ இடத்துக்கு போய் ஸ்கெட்ச் போடுவது வரை ஜான் செய்வான். ஆனால் நேரிடையாக எதிலும் ஈடுபட்டதில்லை. அப்போது அந்த கால் வந்தது. நீ ஊருக்கெல்லாம் கொட்டேஷன் குடுக்கறேன்னு எனக்கு தெரியும். யாரு வேணும் உனக்கு என்றான். நீ தான் உன் உயிர் தான் வேணும் என்றது எதிர் முனை. உன்னை முடிக்க சொல்லி ஆர்டர் வந்திருக்கு என்றான் போனில் பேசியவன். இவன் போனை துண்டித்தான் . லேசாக வியர்க்க தொடங்கியது. அந்த ஃபோன் நம்பர் செக் செய்தான். அது கேள்விபட்ட நம்பர் ஆக இல்லை. முனீருக்கு ஃபோன் செய்து என்னை யாரோ கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் என்றான். தான் அடுத்த வாரம் வந்துவிடுவேன் அதுவரை நீயும் ஊரில் இருக்க வேண்டாம் என்றான் முனீர்.

வீட்டுக்கு போனான் மனைவியிடம் அவசர வேலையாக வெளியூர் போகிறேன். யார் கேட்டாலும் எந்த விவரமும் சொல்ல வேண்டாம் என்றான். ஐபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வீட்டிலேயே விட்டு சென்றான். கேரளாவுக்கு சென்று வரலாம் என எண்ணினான். இத்தனை வருடமாய் தான் இந்த தொழிலில் இருப்பதே அடுத்தவருக்கு தெரியாத வண்ணம் இருந்து வந்தான். அவனுக்கு பதட்டமும், பயமும் உண்டாயிற்று. கேரளாவில் ஆலப்புழாவிற்கு சென்றான். வேறு பெயரில் அறை எடுத்து கொண்டான். ஜானுவும், வருணும் ஹனிமூன் முடிந்து திரும்பினர்.வருண் என்ன ஜானு லீவு எக்ஸ்டெண்ட் பண்ணுகிறாயா என்றான். ஆசைய பாரு. இப்போ டியூட்டி தான் ஃபர்ஸ்ட் என்றாள். முனீர் ஊர் திரும்பியவுடன் ஜானுக்கு ஃபோன் செய்தான். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ரொம்ப பயந்துட்டான் போல என்று சொல்லிக்கொண்டான்.

ஜானு ராமுக்கு ஃபோன் செய்தாள். தீபுவையும் விசாரித்தாள். சீக்கிரம் இந்த கேஸ் குளோஸ் பண்ணனும் என்றாள். நிச்சயமாக என்றான் ராம். வேறு ஒருவரின் ஃபோன் வாங்கி முனீர் போனுக்கு கால் பண்ணினான் ஜான். ஏதாவது தகவல் கிடைத்ததா என்றான்.
நீ பயப்படாதே நான் விசாரித்து சொல்ல சொல்லி இருக்கேன். ஒருத்தரும் உன்னை ஒண்ணும் பண்ண முடியாது என்றான். சரி நான் வைக்கிறேன் என்றான். மூன்று நாட்கள் ஆகி விட்டது கேரளாவுக்கு வந்து. இன்னும் பயம் போகவில்லை. மீரா பிளஸ் ஒன் சேர்ந்து விட்டாள்.கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு. எப்படியோ அவள் படிப்பில் நல்ல மார்க் வாங்கி விட்டால் போதும் மத்ததெல்லாம் ஜானு பார்த்துக்கொள்வாள்.தீபு கீதா பற்றிய விவரங்களை முழுமையாக சேகரித்து விட்டாள். ரொம்ப தாங்க்ஸ் தீபு என்றான் ராம். கீதா ரொம்ப ஏழை குடும்பத்தில் பிறந்தவள். போலீஸ் வேலைக்கு சேர ஆசைப்பட்டவள் அதில் பணத்தை கொடுத்து ஏமாந்தவள் என தெரிந்தது,குழந்தை கடத்தல் தொழிலில் 10 வருடமாக இருப்பவள் என தெரிந்தது. ஹஸ்பண்ட் வெளிநாட்டில் இருக்கிறார்.

ராம் கீதா எதற்கும் துணிந்தவள் போல தெரிகிறாள். நிச்சயம் திருந்த நினைத்தாலும் பரந்தாமன் விடமாட்டான். அதே சமயம் நாம் அவளுக்கே கொட்டேஷன் கேட்ட விஷயம் நிச்சயம் அவளுக்கு எப்படியாவது தெரிந்திருக்கும். விசாரித்திருப்பாள் என்றான். ஜான் ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்தான். வந்தவுடன் தன் போனை தேடினான். அது அங்கு இல்லை. மனைவியை சத்தம் போட்டான். தனக்கு எதுவும் தெரியாது என்றாள். வேறு வழியில்லை போலீசில் கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டியதுதான் என்றான். சரி ஒரு தடவை சிசிடிவி செக் பண்ணுவோம் என பார்த்தான். ஒரு பிரயோஜனமும் இருக்கவில்லை. இவனுக்கு பதட்டம் அதிகரித்தது.போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைண்ட் கொடுத்து வந்தான். அது ஐபோன் என்பதாலும் இவனை சில அதிகாரிகளுக்கு தெரியும் என்பதாலும் வேகமாக விசாரணை நடைபெற்றது. முனீரை போய் பார்த்தான். அவன் என்ன நீ எல்லா விஷயத்திலும் கோட்டை விடுகிறாய் என்றான். இவன் பதில் ஏதும் சொல்லாமல் நின்றான்.

போலீஸ் மறுபடி சிசிடிவி செக் செய்தது. அப்போது வீட்டுக்கு சோப் விற்க வந்த பெண்மணி ஒருத்தி அந்த போனை எடுத்தது தெரிய வந்தது. போலீஸ் உடனடியாக அந்த பெண் போட்டோவை பிளாஷ் நியூஸ் ஆக வெளியிட்டது . ஒரு வாரத்தில் அந்த பெண் கைது செய்யப்பட்டாள் . ஃபோன் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தான் ஜான். ஆனால் ஆபத்து விலகி விட்டதாக சொல்ல முடியாது அந்த கவலையுடன் போனை ஆன் செய்தான்.சில வியாபாரம் சம்பந்தமான மெசேஜ் வந்திருந்தது. முனீருக்கு ஃபோன் செய்து அவனுடைய ஃபோன் கிடைத்து விட்டதாக சொன்னான். முனீரும் நிம்மதி அடைந்தான். பார்வதிக்கு விவாகரத்து கிடைத்து விட்டது. வெளிநாடு போக தயாராகி கொண்டிருந்தாள். ராமை ஒரு முறை சந்தித்து விட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தாள்.

ராமுக்கு ஃபோன் செய்தாள் . சொல்லுங்க பார்வதி சார் எனக்கு விவாகரத்து கிடைத்து விட்டது என்றாள். நல்ல விஷயம் என்றான். நான் என் அம்மாவோடு வெளிநாடு போகிறேன். உங்களை ஒரு முறை சந்திக்க விரும்புகிறேன் என்றாள். சரி வாங்க நான் ஆபீஸ்ல தான் இருப்பேன் என்றான். ஸ்ரீதரும் உடன் வந்திருந்தான். எப்படியோ பரந்தாமன் கிட்டேயிருந்து தப்பிச்சா போதும் என்றாள். அவள் ரொம்பவே பயந்து போயிருந்தாள். நீங்க பயப்படாதீங்க ஏலம் நல்லபடியா நடக்கும் என்றான் ராம். ஸ்ரீதர் தான் எனக்கு எல்லா ஹெல்ப்பும் பன்னாரு. அதனால அவர் குடும்பததுல பிரச்சனை என்றாள். அதெல்லாம் நான் சமாளித்து கொள்வேன் என்றான் ஸ்ரீதர். அடுத்து ஜானுவையும் பார்க்கணும் என்றாள். சரி பார்த்துட்டு வாங்க . ஜானு வீட்டில் போய் பார்த்தாள் . ஸ்ரீதர் வரவில்லை. நீங்க சேஃப் ஆ இருங்க. எப்போ வேணா கால் பண்ணுங்க என்றாள் ஜானு. நீங்க எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கீங்க என்றாள் பார்வதி.

அந்த வாகனம் ஜானை இடிப்பது போல வந்து நின்றது. இவன் சத்தம் போட துவங்க டேய் இவந்தானடா என்றது காரில் இருந்தவன் குரல். ஜான் சுதாரித்து கொண்டு ஓட துவங்கினான்.இவர்கள் கையில் அரிவாளை எடுத்துக்கொண்டு ஜானை விரட்டினார்கள் . ஜான் நடுங்கி விட்டான். ஒரு பேருந்தில் ஏறி தப்பித்து சென்றான்.முனீருக்கு ஃபோன் செய்தான். அவன் போனை எடுக்கவில்லை. இவன் வீட்டுக்கு போகாமல் மண்ணடி ஆபீஸ் போனான். முனீர் அங்கு இல்லை. ஒரு வழியாக முனீர் 7 மணி போல வந்தான். என்னாச்சு என்றான் என்னை சுத்து போட்டாங்க எப்படியோ தப்பிச்சு வந்தேன் என்றான். நல்ல வேளை நீ நேரா இங்க வந்த இங்கேயே இரு அது தான் சேஃப்டி. இங்கே புல்லா நம்ம ஆளுங்கதான் என்றான்.

இரண்டு நாட்கள் கழித்து பார்வதியிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது.நான் ஆபத்தில் இருக்கிறேன் என்று வந்தது. உடனே ஜானுவுக்கு சொல்லி விட்டு பார்வதி வீட்டுக்கு போனான். அவள் அங்கு இல்லை. எங்கேயோ கடைக்கு போறேன்னு சொல்லிட்டு போனா என்றார் அவள் அம்மா. ஜானு மறுபடி பார்வதி ஃபோன் லொகேஷன் செக் செய்தாள். அது அடுத்த தெரு சூப்பர் மார்க்கெட் காட்டியது. உடனே அங்கு விரைந்தாள். ஃபோன் ரிங் மட்டும் போன
து. அங்கே கீழே விழுந்து கிடந்தது. சிசிடிவி ஃபுடேஜ் செக் செய்தாள் ஜானு. பார்வதி வந்த மாதிரியே தெரியவில்லை. சோர்வுடன் இப்போ எங்கு போய் தேடுவது என்றாள். ஸ்ரீதருக்கு ஃபோன் பண்ணி உடனே வர சொன்னாள். அவனும் வந்து தேடினான். அவள் ரெகுலராக போகும் இடங்களில் தேடினார்கள். எங்கேயும் இல்லை. அவள் மாயமாகிவிட்டாள் . இன்னும் இரண்டு நாட்களில் பயணம் இருந்தது. ராம் தீபுவிடம் சொல்லி விசாரிக்க சொன்னான். அவளும் அவளுக்கு தெரிந்த மெசேஜ் குழுக்களிடம் சொல்லி தேட சொன்னாள்.

இரண்டு நாட்கள் ஆகியும் பார்வதியை கண்டு பிடிக்க முடியவில்லை. ஜானு ,ராம் எவ்வளவு முயன்றும் ஒரு க்ளூவும் சிக்கவில்லை. அவளுடைய வண்டி சூப்பர் மார்க்கெட் வாசலிலேயே நின்றது அதை சோதனை செய்த போதும் ஒன்றும் கிடைக்கவில்லை. ராம் ரொம்ப வேதனைப்பட்டான். அவளுடைய முன்னாள் கணவரை காவலில் எடுத்து விசாரித்தார்கள். அவனும் தனக்கு எதுவும் தெரியாதென்று சொல்லிவிட்டான். பரந்தாமன் ஆட்கள் மேல் சந்தேகம் இருந்தது.அவனுடைய கால் ஹிஸ்டரி செக் செய்து பார்த்தார்கள். அப்படி சந்தேகபடும்படி எதுவும் இல்லை.பிரேமா நானும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன் என்றாள் மீடியாவிடம். பார்வதி காணவில்லை போஸ்டர் எங்கும் ஒட்டப்பட்டது.ஜானுவுக்கு சூப்பர் மார்க்கெட் அருகே இருந்த சிசிடிவி வைத்திருந்த கடைகாரர்களிடம் செக் செய்தாள். அவர்கள் யாரும் பார்வதியை பார்க்கவில்லை என்று சொன்னார்கள்.

ராம் திகைத்து போனான். அவள் அந்த சூப்பர் மார்க்கெட் உள்ளேயே இருக்க வேண்டும் இல்லையெனில் பின்பக்கமாக போயிருக்க வேண்டும் என முடிவு செய்தான். அதன்படி சூப்பர் மார்க்கெட் பின்பக்க வாயிலை சோதித்தான். அது ஒரு சந்து போல இருந்தது . அதன் வழி போனான். பார்வதிக்கு எதுவும் நடந்திருக்க கூடாதென கடவுளை வேண்டிக்கொண்டான். இதற்கிடையே ஜான் முனீருடைய சிறிய அறை ஒன்றில் தங்கி இருந்தான். மணி இரவு 12 இருக்கும் அவனுடைய ஃபோன் அடித்தது.