இரவு 6
பார்வதி வீடு அலங்கோலமாக கிடந்தது. பார்வதி அம்மா பயத்தில் நடுங்கியபடி இருந்தார். பார்வதி தலையில் காயத்துடன் சோபாவில் மயங்கி கிடந்தாள். ஜானு அவர்கள் இருவரையும் ஒரு ஆட்டோ பிடித்து பக்கத்தில் இருந்த ஹாஸ்பிடல் ஒன்றில் சேர்த்தாள். எதுக்காக பரந்தாமன் இவங்களை தொந்தரவு செய்யணும் என்றான் ராம். அதுதான் எனக்கும் புரியலை என்றாள் ஜானு. சரி நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க என்றான்.சரி ராம் சார் நாம எப்போ அந்த முனீர், ஜானை பார்க்க போகிறோம் ? சீக்கிரமே அவனே நமக்கு ஃபோன் பண்ணுவான். ஜானு விடை பெற்றுக்கொண்டாள். கொஞ்ச நேரத்தில் கண் விழித்த பார்வதியை ஆசுவாசப்படுத்தினான். பயப்படாதீங்க நீங்க சேஃப் ஆ தான் இருக்கீங்க .. ராம் சார் அந்த பரந்தாமன் என் மேல ஆசைப்படறான். அதுக்கு நான் சம்மதிக்கவில்லை அப்படின்னதும் என் வீட்டுக்கு வந்து ரவுடிங்க தொந்தரவு பண்ணுறாங்க . நீங்க ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் பண்ணி இருந்தீங்களா. ஆமா ஆனா ஒரு நடவடிக்கையும் இல்லை. எல்லாத்துக்கும் முடிவு கட்டுற நேரம் வந்துடுச்சு. நீங்க தைரியமா இருங்க. சரி சார்.
மீரா ஐபிஎஸ் படிப்பு படிக்க விரும்புவதாக சொன்னாள். முதல்ல இந்த வருஷ படிப்பை முடி என்றாள் ஜானு.இல்ல அக்கா நான் நிஜமாவே போலீஸ்ல சேர போறேன் என்றாள். அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது . போலீஸான உனக்கே இவ்வளவு தொந்தரவு கொடுக்கறாங்க . சாதாரண மக்கள் எவ்வளவு கஷ்டபடுவாங்க.நான் முடிவு பண்ணிட்டேன் . அதுக்கெல்லாம் அடுத்த ஸ்டேட்டுக்கு போய் படிக்கணும். இன்னும் நிறைய செலவாகும். நான் முயற்சி பண்ணி பார்க்கிறேனே. சரி உன் விருப்பம் . அவள் அம்மாவும் இதை கேட்டுக் கொண்டிருந்தாள். முனீரும் , ஜானும் ராமை கூப்பிடவில்லை. இவனே ஜானை போனில் கூப்பிட்டான் அவன் உடனே எடுக்கவில்லை. ஒரு 3 மணி நேரம் கழித்து திரும்ப கூப்பிட்டான். அந்த கொட்டேஷன் சம்பந்தமா பேசலாம்னு அதெல்லாம் சரியா வராது சார் என்றான் . எனக்கு வேற ஒரு கொட்டேஷன் வேணும். என்ன கொட்டேஷன்? ஒரு ஆளை சும்மா தட்டி வைக்கணும். இதை முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே என்றான்.1 லட்சம் ஆகுமென்றான். மத்த டீடெயில்ச நேர்ல பேசிக்கலாம் என்றான் ஜான். எப்போ வரணும் மேட்டர் கொஞ்சம் அர்ஜண்ட். நாளைக்கு சாயங்காலம் முனீர் ஃப்ரீயா இருப்பாரு அப்ப வந்து பாருங்க. சரி .
தீபு நீங்களும் ஜானுவும் போய் முனீரை அரெஸ்ட் பண்ண போறீங்களா? எதுக்கு ரிஸ்க் மறுபடி அவன் அட்டாக் பண்ண மாட்டான் அப்படின்னு என்ன நிச்சயம். நீ சொல்றதும் சரிதான். அப்படின்னா நான் மட்டும் போறேன். அவன் லொகேஷன் வந்ததும் ஜானுவை கூப்பிட்டுக்கிறேன். நீங்க இப்போ யார் போட்டோ காட்டுவீங்க ? அவங்களுக்கும் அதனால ஆபத்துதானே. அதை நான் யோசிக்காம இருப்பேனா ?நான் குடுக்க போறது அந்த பொண்ணோட போட்டோ. ரம்யா கடத்தல் கேஸ்ல சம்பந்தப்பட்ட பணம் வாங்குன பொண்ணு போட்டோ. ஒருவேளை அவனுக்கும் அவளுக்கும் லிங்க் இருந்தாலும் தெரிஞ்சுடும். இது வொர்கவுட் ஆகுமா. நிச்சயம் ஏதோ விளைவுகள் ஏற்படுத்தும் ஆனா என்ன நடக்கும்னு தீர்மானமா சொல்ல முடியாது.ஜானுவிடம் விஷயத்தை சொன்னான். எனக்கு அவனை பிடிக்க போதுமான ஆதாரமும் தேவை . அப்படி கிடைச்சா நல்லா இருக்கும் என்றாள். ஓகே நான் முயற்சி பண்ணுறேன் என்றான்.
ஜான் இவனை கண்டதும் புன்னகைத்தான். முதலிலேயே சொல்லி இருக்க கூடாதா என்னோட கமிஷன் தனி என்றான். முனீர் அதிகம் பேசுபவனில்லை. இவன் அந்த பெண்ணின் போட்டோவை கொடுத்தான். முனீர் அதை வாங்கி பார்த்தான். ஃபோன் நம்பர் இருக்கா? மவுண்ட் ஸ்டேஷன் பக்கத்துல ஆட்டோ ஓட்டுறா .. வேறு விவரம் தெரியல . சரி அட்வான்ஸ் குடுத்துட்டு போ என்றான். ராம் ஜானிடம் 20000 ரூபாய் கொடுத்தான். ரொம்ப கம்மியா இருக்கே பரவாயில்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் என்றான்.ராம் அங்கிருந்து கிளம்பினான். ஜானு முனீர் இப்போ அந்த பொண்ணை பத்தி நிச்சயமா விசாரிப்பான். கண்டிப்பா அவ மாட்டுவா என்றான் ராம்.
பரந்தாமனை அரெஸ்ட் பண்ண விடாம பிரேமாதான் தடுத்து
வச்சிருக்காங்க என்றாள் ஜானு.இரண்டு வாரங்கள் கழித்து ஜான் ஃபோன் செய்தான். அந்த பொண்ணை கண்டுபிடிக்கிறதுக்குள்ள போதும் போதும் அப்படின்னு ஆயிடுச்சு . நீங்க கடசியா பேசணும்னா பேசி பாருங்க.. அட்ரஸ் மெசேஜ் பன்றேன் என்றான்.
ராம் அந்த அட்ரஸ் லொகேஷன் நோக்கி விரைந்தான். காலிங் பெல் அழுத்தினான். வீடு பெரிய தனி வீடாக இருந்தது.
அந்த பெண்ணே வந்து கதவை திறப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. யார் வேணும் என்றாள்.பின்னாலேயே பையன் பத்து வயதிருக்கும் வந்தான். பரந்தாமன் சொல்லிவிட்டார். சரி சரி உள்ளே வாங்க என்றாள். நீ போய் படி என பையனை துரத்தி விட்டாள். நான் இப்போ அதெல்லாம் விட்டாச்சு. ஆட்டோ கூட விட்டாச்சு என்றாள்.ரம்யாவை மறுபடி கடத்தனும் என்றான். நான்தான் சொல்லுறேன்ல அவர்கிட்ட நான் பேசிக்குறேன் என்றாள். அப்போ நான் வரட்டுமா ,, இருங்க அவர் கிட்டயே பேசிடலாம். வேண்டாம் என்பதற்குள் ஃபோன் போட்டாள். போனை இவன் கையில் கொடுத்தாள். யாருடா நீ என்றான் பரந்தாமன். நான் யாருங்கிரது முக்கியமில்லை. நீ பண்ணின ஃப்ராட்தனத்துக்கு முடிவு நெருங்கிடுச்சு என்றான். பரந்தாமன் போனை துண்டித்தான். என்ன சொன்னாரு நான் வேறாள் பார்த்துக்கிறேன். விடை பெற்றான். ஜானுக்கு ஃபோன் செய்து அந்த பொண்ணுக்கு பையன் இருக்கான் பாவமா இருக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம் ,, நீங்க அட்வான்ஸ் வச்சுக்குங்க.. அப்புறம் ஏதாவது இருந்தா நானே சொல்லுறேன் என்றான்.
ஜானுவிடம் தான் பரந்தாமனிடம் பேசியதை பற்றியும், அந்த பெண் பெயர் கீதா என்பதை பற்றியும் சொன்னான். நீங்க எனக்கு சொல்லியிருக்கலாம். அவ திருந்தி விட்டதா சொல்லுறா.. அதான் அப்படியே விட்டுட்டேன் என்றான். பரந்தாமன் இந்நேரம் என் ஜாதகத்தை கையிலெடுத்து இருப்பான். அவன் கிட்ட நாம நேரடியா மோத வேண்டியதுதான். ஜானு வேறு சில வழக்குகளில் பிஸி ஆனாள். அவளுடைய கல்யாணத்துக்கு இன்னும் சில வாரங்களே இருந்தது. தீபு நடப்பவற்றை எல்லாம் உன்னிப்பாக கவனித்து வந்தாள். கல்யாணத்துக்கு பிறகு 2 வாரம் ஹனிமூன் ட்ரிப் பிளான் பண்ணியிருப்பதாக வருண் சொன்னான். எதற்க்கு 2 வாரம் 1 வாரம் போதுமே என்றாள் ஜானு. அதெல்லாம் அப்படித்தான் . பிறகு உனக்கு லீவு கிடைக்காது. சரி சரி உன் விருப்பம். ஜானு கல்யாணபத்திரிக்கையை நண்பர்கள், குடும்ப நண்பர்கள், சொந்தக்காரர்கள் எல்லோருக்கும் கொடுத்தாள் .பிரேமா வீட்டுக்கு போய் பத்திரிக்கை வைக்கும் போது சாரையும் அவசியம் அழைச்சிட்டு வாங்க என்றாள். நிச்சயமாக என்றாள் பிரேமா.
ராம் ஃபோன் பண்ணியிருந்தான். நீ பரந்தாமனை வீட்டிலே பார்த்தியா ஜானு? இல்லை ஆனால் கல்யாணத்துக்கு நிச்சயம் வர சொல்லி இருக்கேன். ம் நடக்குறது நடக்கட்டும் என்றான் ராம். நாம அடுத்து என்ன செய்ய போறோம் ராம் சார். உங்க கல்யாணம் நல்லபடியா முடியட்டும் நானே சொல்லுறேன் . இப்போதைக்கு எதுவும் வேணாம். மீரா எப்படி இருக்கா, அவளுக்கு போலீஸ் ஆகனுமாம்.. அது சரி. அக்கா போல தங்கை. மீரா 10த் பப்ளிக் எக்ஸாம் எழுதி இருந்தாள். எக்ஸாம் ரிசல்ட் வருகைக்காக ஆவலாய் காத்திருந்தாள்.ஜானுவின் அம்மா கோவில் கோவிலாக போய் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டாள். கீதா இதற்கு முன் இதே மாதிரி எத்தனை குழந்தை கடத்தல் செய்திருக்கிறாள் என பார்க்கவேண்டும் தீபு என்றான். அவளுக்கு பின்புலம் பரந்தாமன். ஆனால் அவள் திடீரென திருந்தி விட்டதாக சொல்வது நம்பும்படி இல்லை தீபு.
நான் அவள் பேக்ரவுண்ட் செக் செய்கிறேன் சார். அப்போதுதான் உண்மை என்னவென்று முழுசாய் தெரிய வரும். தீபு கீதா பற்றிய ப்ரோஃபைல் ஒன்று ரெடி பண்ணு . மேற்கொண்டு அவள் அப்ரூவர்
ஆனால் நமக்கு பரந்தமனை பிடிப்பது ஈசி என்றான்.வருண் கல்யாண ஏற்பாடுகளை முன் நின்று நடத்தினான்.அவனுக்கு பயம் இருந்தது. எங்கே ஏதாவது மறுபடி ஜானு குடும்பத்தில் நடந்தால் கல்யாணத்தை நிறுத்தி விடுவார்களோ என பயம் இருந்தது. ஜானு அவனுக்கு தைரியம் சொன்னாள். நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கொள்வோம் என்றும் சொன்னாள். வருண் நீ இந்த வேலையை விட்டு விடேன் என்றான்.அதெல்லாம் கஷ்டம். சொந்தக்காலிலே நின்று வாழ பழகி விட்டேன் என்றாள். திவ்யா என்ன நீ மட்டும் தனியாக துப்பறிய போகிறாயாமே என்றாள் ஜானுவிடம். அதெல்லாம் இல்லை. கத்தி குத்து சம்பவத்துக்கு பிறகு ஆளே மாறிவிட்டாய் . நீயாக ஆபத்தை தேடிக்கொள்ளாதே , எனக்கு உன் மீதுள்ள அக்கறையினால் இதை சொல்கிறேன் என்றாள் . ஜானு பதில் ஏதும் சொல்லவில்லை.
மீரா எக்ஸாம் ரிசல்ட்ஸ் வந்து விட்டது. 90 சதவீதம் வாங்கியிருந்தாள். வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. அவள் அப்பா புகைப்படம் முன் விழுந்து நமஸ்கரித்தாள். ஜானுவுக்கு பெருமையாய் இருந்தது. அவள் அம்மாவுக்குத்தான் இவள் இன்னும் பெரிய படிப்பெல்லாம் படிப்பேன் என்கிறாளே என்ற கவலை இருந்தது.ஜானு நான் இருக்கிறவரை நீ என்ன வேண்டுமானாலும் மேற்கொண்டு படி என்றாள். தாங்க்ஸ் அக்கா என்றாள்.வருணுக்கும் இதில் மகிழ்ச்சிதான். எல்லோரும் சிறிய டின்னர் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார்கள். ஜானு தன் வேலையில் கவனமாய் இருந்தாள். அவளை பிரேமா கவனித்து கொண்டுதான் இருந்தாள். ஆனால் அவளை தன் கண்ட்ரோலில் வைத்திருக்க வேண்டும் என்றால் விட்டுத்தான் பிடிக்க வேண்டும் என பொறுமை காத்தாள் . காலம் வேகமாய் ஓடியது.
ஜானு கல்யாணதுக்கு தீபு, ராம், பரந்தாமன், பிரேமா எல்லோரும் வந்திருந்தனர். ராமை பரந்தாமனுக்கு அறிமுகம் செய்தாள் ஜானு. ராம் புன்னகையுடன் அவனோடு கை குலுக்கினான் . தீபு வந்தவர்களுக்கு கூல் டிரிங்க்ஸ் குடுத்து கொண்டிருந்தாள். மீரா தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். கல்யாணம் களை கட்ட தொடங்கியிருந்தது. ஜானுவின் கழுத்தில் மங்கள மேளங்கள் முழங்க வருண் தாலி கட்டினான். இனிமே உன் டியூட்டி என் கூடத்தான் என்றான். அக்னி குண்டத்தை வலம் வந்தனர். ஜானு அம்மா நிம்மதி பெருமூச்சு விட்டாள் . கொஞ்ச நேரம் இருந்துவிட்டு பிரேமாவும்,பரந்தாமனும் விடை பெற்றனர். தீபு, ராம் கிப்ட் கொடுத்தனர். கல்யாணம் நல்லபடியாய் முடிந்ததில் ராமுக்கும், தீபுவுக்கும் சந்தோஷம். முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் ஜானு. வருண் நீ வந்ததே போதும் என்றான். அப்போ மத்தது ? உன் விருப்பமே என் விருப்பம் என்றான். ஜானுவை கட்டியணைத்தான் வருண். காலம் தன் மெய்மறக்க தொடங்கியது. அது எல்லாவற்றையும் கவனிக்க தொடங்கியது.