இரவு 5
ராம் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்தான். போலீசார் சற்று தாமதமாக வந்தனர். ஜானுவுக்கு நடந்ததை கேள்விப்பட்ட வருண் துடித்து போனான். ஜானுவை ஐ சி யு வில் அனுமதித்திருந்தார்கள்.மிகுந்த பதட்டத்துடன் ஜானுவின் அம்மாவும், மீராவும் வந்தார்கள். ராம் , தீபுவிடம் சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினான். வருண் என்ன நடக்குது ராம் சார் ஒண்ணுமே புரியலை என்றான். அப்போது எஸ் ஐ பிரேமா ஹாஸ்பிடல் வந்தார். கூடவே மீடியா ஆட்களும் வந்திருந்தனர். பிரேமா அவர்களிடம் நாங்கள் தீவிரமாக விசாரிக்கிறோம்.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவோம் என்று மட்டும் சொன்னாள். ஜானுவின் அம்மாவுக்கு ஆறுதல் சொன்னாள் பிரேமா. கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு சென்றாள். அவள் ராமையோ , தீபுவையோ பொருட்படுத்தவில்லை. மீரா பயப்படாதே உன் அக்காவுக்கு ஒன்றும் ஆகாது என்று ராம் சொன்னான்.
என்ன சார் இப்படி நடந்துடுச்சே என்றாள் தீபு. என்ன நடந்ததுன்னு ஜானு கண் முழிச்சாதான் தெரியும் என்றான் ராம் . சுமதி, ஸ்ரீதர், பார்வதி எல்லோரும் வந்திருந்தனர் ஜானுவை பார்க்க. ரொம்ப நல்ல மாதிரி என்று சுமதி மீராவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் . வருண் அப்பா, அம்மா வந்திருந்தார்கள். ஒண்ணும் யோசிக்காதீங்க இந்த போலீஸ் வேலையில் இதெல்லாம் நடக்கும். எல்லா நேரமும் நமக்கு சாதகமா இருக்காது என்றார் வருண் அப்பா. நல்ல வேளை கரெக்ட் டைமுக்கு அட்மிட் பண்ணியிருக்காங்க அதனால சீக்கிரமா குணமாகி விடுவாள் என்றாள் வருணின் அம்மா. ஜானுவை இரண்டு நாட்கள் கழித்து சாதாரண பிரிவுக்கு மாற்றி இருந்தார்கள். அவள் கண்விழித்து பார்த்ததும் வருண் அழுதான். என்ன வருண் சின்ன பிள்ளை மாதிரி என்றாள். இந்த வேலையும் வேணாம் ஒண்ணும் வேணாம் என்றான். அவள் சிறிது நேரம் அவன் கையை பிடித்து கொண்டிருந்தாள். அவள் கண்களை மூடிக்கொண்டாள். ராம் , தீபு இருவரும் அமைதியாக இருந்தனர். அவள் நன்கு குணமாகும் வரை காத்திருக்க முடிவு செய்தனர்.
இரண்டு வார ஓய்வுக்கு பிறகு வீட்டுக்கு அழைத்து வந்தனர் ஜானுவை. வருண்தான் எல்லாம் பார்த்து கொண்டான். வருண் அவளிடம் இப்போது எதுவும் பேசி ஸ்ட்ரெஸ் ஆக்க வேண்டாம் என ராமை கேட்டுக்கொண்டான். சரி சார் என்று ராம் சொன்னான். சில உயரதிகாரிகள் வந்து பார்த்து போயினர். சில பேரை சந்தேக கேசில் போலீஸ் பிடித்து சிறையில் அடைத்தனர். மற்றபடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திவ்யா வந்திருந்தாள்.அவளிடம் நான் ரொம்ப பயந்துட்டேன் என்றாள் ஜானுவிடம். ஸ்டேஷன் டியூட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட் பண்ணி இருக்காங்க. சரி நான் வரவா என விடை கொடுத்தாள் . வருண் அப்பா, அம்மா இந்த கல்யாணத்தை நடத்துவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தனர். வருண் பிடிவாதமாக இருந்தான். இதெல்லாம் யாரும் எதிர்பார்க்காதது எல்லாம் சரி ஆயிடும் என்றான்.
கொஞ்சம் நடமாட ஆரம்பித்ததும் ராமையும், தீபுவையும் பார்க்க விரும்புவதாக சொன்னாள். அவர்கள் அவள் வீட்டுக்கு போனார்கள். ரொம்ப சாரி நாங்க உங்களுக்கு இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல . அதை விடுங்க. அன்னிக்கி பார்வதி வீட்டுக்கு நான் போயிட்டு திரும்ப வரப்போதான் சம்பவம் நடந்தது. அதை செஞ்சது பரந்தாமன் ஆட்டோல வந்தவங்கதான் என்றாள்.என்னவோ வேற பிரச்சனை இருக்கு. இல்லைனா இவ்வளவு ஆக்ரோஷமா தாக்குதல் நடத்த மாட்டாங்க என்றான் ராம்.எப்போ டூட்டில ஜாயின் பண்ண போறீங்க . அடுத்த வாரம். என்னால இப்போ கூட நம்ப முடியல. நீங்க பயம் இல்லாம இருக்கீங்க. என்ன சார் பண்ணுறது அம்மா இருக்காங்க , தங்கை இருக்கா எனக்கு அவங்களை காப்பாத்தியாகனும் என்றாள்.ராம், தீபு விடைபெற்று கொண்டனர்.
நாம என்ன பண்ண போறோம் சார். பரந்தாமன் பத்தி நமக்கு தெரிஞ்ச டீடெயில் எல்லாத்தையும் வெச்சு மீடியால ஒரு நியூஸ் கொடுப்போம். போலீஸ் என்ன செய்யுறாங்க அப்படின்னு பார்ப்போம் என்றான். அதன்படியே ஒரு நியூஸ் வெளியானது. மீடியா பிரேமாவை சுற்றி வளைத்து கேள்வி கேட்டது. அவள் எல்லாவற்றையும் திட்டவட்டமாக மறுத்தாள் . இதுக்கும் என் ஹஸ்பண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு பிஸினஸ் மேன் என்றாள். பிரேமாவுக்கு உயர் அதிகாரிகள் தரப்பிலிருந்து உடனடியாக அந்த வீடியோ குறித்து விசாரிக்கும் படி உத்தரவிடப்பட்டது. ஒருபுறம் குழந்தை கடத்தல், மறுபுறம் கொலை முயற்சி . யார் சார் இந்த பரந்தாமன் என்று கேட்டாள் தீபு. அதை கண்டுபிடிக்கத்தானே நாம இருக்கோம் என்றான் ராம்.
கொஞ்ச நாளைக்கு எதுவும் பண்ணாமல் இருப்பான் பரந்தாமன் என எதிர்பார்த்தான் ராம். ஜானு டியூட்டியில் ஜாயின் பண்ணி விட்டாள்.
வருண் அவளை பார்த்து பூங்கொத்து கொடுத்து வந்தான்.
ஜானுவுக்கு வருண் மேல் காதலோடு நம்பிக்கையும் அதிகரித்தது. மதியம் லஞ்ச் ஒன்றாய் சாப்பிட்டார்கள். அப்பா அம்மா கோவமாய் இருப்பதாய் சொன்னியே வருண். அதெல்லாம் நான் சமாதானப்படுத்தி விட்டேன் என்றான். நீ பழையபடி நலமுடன் இருந்தாலே போதும் அதுவே எனக்கு உற்சாகம் தரும் என்றும் சொன்னான். ராம், தீபு கனெக்ஷன் எல்லாம் நமக்கு வேண்டாம் என்றான். அவள் அமைதியாய் இருந்தாள்.சரி உன் விருப்பம் நான் எதுவும் சொல்லவில்லை உடனே முகம் மாறிவிட்டதே ..டைம் ஆகிவிட்டது நான் கிளம்புகிறேன் என்றாள். சரி என்னை எப்போதும் ஞாபகம் வைத்து கொள் என்றான் .மீரா அக்கா உன்னிடம் நன்றாக பேசி எத்தனை நாளாகிறது தெரியுமா? அதெல்லாம் நான் உன்னை விட்டு எங்கும் போக மாட்டேன் என்றாள். அப்போது டி வி யில் அந்த சிசிடிவி காட்சி ஒளிபரப்பானது. அதில் ஜானுவை ஆட்டோவில் வந்தவன் கத்தியால் குத்துவது ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அந்த ஆட்டோ நம்பர் தெளிவாக இருந்தது. பிரேமா டென்ஷன் ஆகிவிட்டாள். யார் இந்த வேலையை பார்த்தது.
அந்த ஆட்டோ கிடைத்து விட்டதாகவும். அதில் இருந்த குற்றவாளிகளின் படங்களை வெளியிட்டாள் . ஜானு இவங்க இல்ல ராம் சார். என்னை கத்தியால குத்துனவன் இவன் இல்ல என்று போனில் சொல்லி கொண்டிருந்தாள். அவன் உருவம் கொண்ட ஸ்கெட்ச் மாதிரி ஒன்று உருவாக்கி தரும்படி ஜானுவை கேட்டுக்கொண்டிருந்தான். ஸ்டேஷன் வாசலில் அந்த ஆட்டோ நின்று கொண்டிருந்தது.தீபு அந்த சிசிடிவி ஃபுடேஜ் யார் அனுப்பி இருப்பா ? அதுதான் எனக்கும் புரியல. நாம அதை தேடிக்கிட்டு இருந்தோம் என்றாள். பார்வதியிடம் இருந்து ராமுக்கு ஃபோன் வந்தது. என்னை காப்பாத்த போய்தானே இது நடந்தது. நான்தான் எங்க ஏரியால விசாரித்து அந்த சிசிடிவி ஃபுடேஜ் எடுத்தேன் என்றாள். ரொம்ப தாங்க்ஸ் மேடம் என்றான்.பார்வதி நீங்க ஜாக்கிரதையா இருங்க என்றான். நான் விவாகரத்து கிடைத்த உடனே வெளிநாடு போக முயற்சி பண்ணிட்டு இருக்கேன் என்றாள்.
அந்த சிசிடிவி ஃபுடேஜ் திரும்ப ஓட விட்டு பார்த்தான். அந்த கடை வாசலில் யாரோ நிற்பது தெரிந்தது. கத்தியால் குத்துவதை வேடிக்கை பார்த்தபடி நிற்பது தெரிந்தது. முடிந்தவுடன் ஆட்டோவில் இருந்தவன் கட்டை விரலை உயர்த்தி காட்டினான்.இவனும் பதிலுக்கு கட்டை விரலை உயர்த்தி காட்டுகிறான். அந்த ஆளை ஜும் பண்ணி பார்த்தார்கள். அவன் சற்றே உயரம் குறைவானவனாக இருந்தான். அந்த ஏரியாவை சேர்ந்தவனாக இருக்க வாய்ப்பு அதிகம் . உடனே ராம் புறப்பட்டான். அந்த கடை வாசலில் சிசி டிவி அகற்றப்பட்டு இருந்தது. போலீஸ் வந்து எல்லாம் அள்ளிக்கிட்டு போயிட்டாங்க சார் என்றான் கடைகாரன் . இங்கே நிக்கிற ஆள பார்த்திருக்கீங்களா இதுக்கு முன்னாடி? இவரா இவர் எங்க கடைக்கு சப்ளையர் சார். சரி இவர் ஃபோன் நம்பர் கிடைக்குமா ? தரேன் சார். எனக்கு ஒண்ணும் பிரச்சனை வராதே என்றான். நிச்சயமா வராது என்றான் ராம்.
ஹலோ சார் என் பேரு ராம் . நான் உங்களை உடனடியா பார்க்கணும் என்றான். என்ன விஷயமா எனக்கு உங்க மெடீரியல் ரொம்ப புடிச்சி போச்சு அதனால பர்சேஸ் பண்ண நினைக்கிறேன். அட்ரஸ் லொகேஷன் மெசேஜ் என்றான். ஒரு அரைமணி நேரம் கழித்து மெசேஜ் வந்தது. இது ரொம்ப ரிஸ்க் ஆச்சே சார் என்றாள் தீபு. வேற வழியில்லை. இவன்தான் குற்றவாளிகளுக்கு இன்பார்மர் அப்படின்னா இவனை விசாரிச்சுத்தான் ஆகணும் என்றான்.ராம் அவன் சொன்ன மண்ணடி அட்ரஸ் போனான். அங்கே அவன் இல்லை . இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் அவன் வர என்று சொன்னார்கள். ஜானு அவளை கத்தியால் குத்தியவன் ஸ்கெட்ச் ரெடி பண்ணிவிட்டாள். அதை ராமுக்கு மெசேஜ் செய்திருந்தாள் .
சப்ளையர் பெயர் ஜான் என தெரிந்தது. அங்கிருந்த ஆட்களில் ஜானு அனுப்பிய உருவம் கொண்டவன் வருகிறானா என பார்த்தான். அப்படி யாரும் இல்லை.
ஜான் சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு என்றான். இவன் எடுத்து போயிருந்த பட்டியலை நீட்டினான். இந்த ஐட்டம் எல்லாம் பாரின் ஐடெம் நம்மகிட்ட கிடையாது என்றான். ஆனா எனக்கு நீங்க கொட்டேஷன் வாங்கி தர முடியுமா என்றான்.சரி வாங்க என அடுத்த அறைக்கு அழைத்து போனான். அங்கே ஜானுவை கத்தியால் குத்திய ஆள் அமர்ந்திருந்தான். இவர் சில பாரின் ஜாமான் கொட்டேஷன் கேக்குறாரு என்றான். அவனிடம் பெயருக்கு பேசிவிட்டு வெளியே வந்தான். ஜானுவுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னான். அவனை அப்படியே விட வேண்டாம் என்றாள். நான் மறுபடி வெள்ளிக்கிழமை அவனை சந்திப்பதாய் சொல்லி இருக்கிறேன் என்றான். நானும் வருகிறேன் என்றாள். இது ஆபத்து ஜானு. என்னவோ அவனை பிடித்து ஜெயிலில் போட்டால்தான் நிறைய பேரை காப்பாற்ற முடியும் என்றாள். எதற்கும் இவனை பற்றிய தகவலை போலீஸ் உயரதிகாரிக்கு அனுப்பி வைக்கிறேன் என்றான். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாம் நிச்சயம் அவனை சந்திப்போம். ஓகே சார்.
தீபு அவனை பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் சில்லிட்டு விட்டது என்றான் ராம். பயமில்லை அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை.வருண் ஜானு கல்யாணத்தை முன்னதாகவே நடத்த தீர்மானித்து விட்டனர் இரு வீட்டாரும். அடுத்த மாதமே கல்யாணம் என்று முடிவனதும் மகிழ்ச்சி அடைந்தான் வருண். எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.ராமுக்கும் இந்த செய்தி எட்டியது. நல்ல விஷயம்தான்.வாழ்த்துக்கள் ஜானு என்றான்.என்னை கத்தியால் குத்தியவன் பெயர் என்ன என்று சொன்னீர்கள் முனீர்.அப்போது பார்வதியிடம் இருந்து ஃபோன் வந்தது. அவர்கள் என் வீட்டு வாசலிலயே நிற்கிறார்கள் ராம் சார். என்னை காப்பாற்றுங்கள் என்றாள். ராம் ஜானுவுக்கு ஃபோன் செய்தான். இருவரும் அங்கு உடனடியாக விரைந்தார்கள். ஜானுவை ராம் தன்னுடைய காரில் பிக்அப் செய்து கொண்டான்.