Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவை சுடும் வெளிச்சம் - 4

இரவு 4
ராம் ரம்யா கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கினை பற்றிய விவரங்களை படித்து கொண்டிருந்தான். ரம்யாவை சந்தித்து பேசினால் கூடுதல் விவரங்கள் கிடைக்குமென நினைத்தான்.ஆனால் இப்போது தான் குழந்தை பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்திருப்பதால் அதை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கருதினான். தீபு பிரதீப், பார்வதி பற்றி விசாரிக்க முடிவு செய்திருந்தாள் .விசாரணையை அங்கிருந்தே தொடங்கலாம் என ராம் ஆமோதித்தான். பார்வதிக்கும், ஸ்ரீதருக்கும் இருந்தது வெறும் நட்பு அடிப்படையிலான பழக்கம் என தெரிய வந்தது. பிரதீப்பும் கடத்தல் சம்பத்தப்பட்ட வேலைகளை செய்யும் அளவுக்கு தைரியசாலி கிடையாது எனவும் புரிந்தது. ஜானு அவளுடைய பழைய குற்றவாளிகளின் ரெகார்ட்களை இந்த பெண்ணின் போட்டோ வைத்து சரி பார்த்தாள் . ஒரு க்ளூவும் சிக்கவில்லை.

வருண் தன்னுடைய கவலையை ஜானுவிடம் பகிர்ந்து கொண்டான். நீ பாட்டுக்கு போயிடறே கல்யாணம் நடக்குமா ? என்றான் . என்ன வருண் இது ?இது என்ன பெரிய கேஸ். இதை விட பெரிய கேசெல்லாம் நான் இன்ஸ்பெக்டர் ஆன உடனே பார்க்க வேண்டி இருக்கும் என்றாள் சிரிப்புடன்.தான் இந்த கேசை ராம், தீபுவிடம் ஒப்படைத்திருப்பதாக சொன்னாள். அவர்கள் நிச்சயம் குற்றவாளியை பிடிக்க ஹெல்ப் பண்ணுவார்கள் என்றும் சொன்னாள். அது சரி நானும் உன் கூட ஸ்டேஷன்லதான் குடும்பம் நடத்தனும் போல என்றான் . கவலைப்படாதே வருண் அப்படி எல்லாம் நடக்காது.வருண் உடன் தன் வாழ்க்கை நிச்சயம் மாறும் என நினைத்தாள் ஜானு. அவன் தன்னை புரிந்து கொண்டு குடும்பம் நடத்துவான் எனவும் நம்பினாள்.

ராம் அடுத்த கட்டமாக ரம்யாவுடைய ஸ்கூல் வளாகத்துக்கு போனான். ரம்யா விவகாரத்தில் அவர்கள் பெரிதாக அவர்கள் அலட்டிக்கொள்ளவில்லை . அவன் அங்கிருந்த வாட்ச்மேன் கிட்டே போய் விசாரித்தான். அந்த பொண்ணை முன்பு பார்த்ததில்லை என்று சொன்னான். நீங்கதான் அந்த ஆட்டோவை கூப்பிட்டு விட்டதாக சொல்லுறாங்க.. அது உண்மையா? சார் நான் புள்ளக்குட்டிக்காரன் ..அதனாலேதான் கேக்குறேன் உண்மைய சொல்லுங்க. நான் இந்த பொண்ண பார்த்தேன். நான்தான் ரம்யாவை ஆட்டோவுல ஏத்தி விட்டேன். ஏதும் அந்த ஆட்டோவுக்கு பிரத்யேக அடையாளம் இருந்ததா? இந்த ஏரியா ஆட்டோதானா அது ? அந்த ஆட்டோ.. அது வந்து எப்பவும் முருகன்தான் ஓட்டுவான். அன்னைக்கு அந்த பொண்ணு ஓட்டிட்டு வந்தது. முருகன் ஃபோன் நம்பர் இருக்கா. இருக்கு சார். அவன் வீடு தெரியுமா ? தெரியும் சார். சரி வாங்க போவோம். வேணாம் சார் அவன் ஒரு மாதிரியான ஆளு. இந்த விவகாரத்துல நான் இருக்கேன்னு தெரிஞ்சா என் வேலை போயிடும் சார்.சரி நான் பார்த்துக்கிறேன். நீங்க பசங்க விஷயத்துல ஜாக்கிரதையா இருங்க என்றான்.

முருகன் பற்றிய விவரங்களை போலீஸ் கலெக்ட் செய்தது. அவனுக்கு உடல் நிலை சரி இல்லாததால் ஆட்டோவை விற்று விட்டதாக சொன்னான்.ஒரு சேட்டிடம் விற்று விட்டதாக சொன்னான். சேட்டிடம் விசாரித்த போது அவர் சரியான விவரங்கள் வைத்திருக்கவில்லை. அந்த பெண்ணை அவர் பார்த்திருக்கவும் இல்லை. முருகன் குரலோடு அந்த மிரட்டிய குரல் ஒத்து போகவும் இல்லை. அந்த ஆட்டோவின் நம்பர் மட்டுமே கிடைத்தது.அவர்கள் அதன் வடிவத்தை மாற்றி இருக்கலாம் என கருதினான் ராம். அந்த நம்பர் வைத்து செக் பண்ணிய போது முருகன் சொன்னது உண்மை என தெரிந்தது. ஆர் டி ஓ ஆபீசிலும் விசாரித்து விட்டார்கள். ராம் சேட்டுக்கு வந்த கால் ஹிஸ்டரி செக் செய்தான். அதில் வந்த நம்பர் சுமதிக்கு கால் பண்ண வந்த நம்பர் கூட ஒத்து போனது. சேட்டு ஒரு நாளைக்கு நிறைய பேர் கால் பண்ணுறாங்க அதிலே யாருன்னு கேட்டா எப்படி சொல்லுறது என்றார்.

தீபு முருகன் பத்தி தரவா செக் பண்ணினாயா ? நிச்சயமா பாஸ். அவன் அந்த ஆட்டோவ முதல்ல குடுக்கல அப்புறமா என்ன நினைத்தானோ வித்திருக்கான். என்ன அவசரம். அவனுக்கு உடம்பு ரொம்ப முடியல அதுதான். சரி இப்போ என்ன பண்ணுறது. சேட்டு எதையாவது மறைக்கிற மாதிரி தெரியுதா ? அதெல்லாம் இல்லை சார். சேட்டு கடை முன்னாடி ஒரு சிசிடிவி பார்த்தேன். அதை செக் பண்ணலாமா . நிச்சயம் ஆனா இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும் என்றான்.போலீஸ்கிட்ட சில விஷயங்களை இப்போ ஷேர் பண்ண வேண்டாம் . சரி . அந்த சிசிடிவி இன்ஸ்டால் பண்ணிய நிறுவனத்துக்கு ஃபோன் பண்ணி ஒரு குறிப்பிட்ட அமெளண்ட் தருவதாக சொல்லி அதன் ஃபுடேஜ்களை வாங்கினான். சேட்டு ஆட்டோவை கடையின் வாசலிலே நிறுத்தி இருந்தான். அந்த ஆளுக்கு 45 வயதிருக்கும் வந்து கடைக்குள்ளே போனார். சேட்டு வண்டி சாவியை அவரிடம் கொடுப்பது தெரிந்தது. அந்த ஆள் அந்த வண்டியை எடுத்து போனான். அவன் போட்டோவை எடுத்துக்கொண்டு ஜானுவுக்கு அனுப்பி வைத்தான்.

அந்த போட்டோவை பார்த்தவுடன் ஜானுவுக்கு இது பெரிய விவகாரம் என்று தெரிந்தது. ஜானு எஸ் ஐ பிரேமாவின் கணவர்தான் அது என்பதை உறுதிப்படுத்தினாள் . ஆனால் மிரட்டிய குரல் வேறு ஒருவருடையது என்பதையும் சொன்னாள். ராம் ஜானுவிடம் இனி நீதான் சொல்ல வேண்டும் மேற்கொண்டு விசாரணை நடத்தினால் நீ பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றான். நான் பெரிய அதிர்ச்சியில் இருக்கிறேன் நானே உங்களை கூப்பிடுகிறேன் என்றாள். ஜானு செய்வதறியாமல் திகைத்தாள் . திவ்யாவிடம் கூட சொல்லவில்லை. ஆனால் வருணிடம் சொன்னாள். இது எங்க போய் முடியுமோ? உன்னை ட்ரான்ஸ்பர் பண்ணிட்டா நம்ம பாடு திண்டாட்டம்தான் என்றான்.சரி பாதி கிணறு தாண்டியாயிற்று மிச்சத்தையும் தாண்டு.. நான் இருக்கிறேன் உன்னோடு என்றான்.தாங்க்ஸ் வருண் ஐ லவ் யு என்றாள். ஜாக்கிரதையாக இரு என்றான்.

ராம் தீபு இருவரையும் ஒரு ரெஸ்டாரண்ட் ஒன்றில் வைத்து சந்தித்தாள் . என்ன செய்யலாம் இது பிரேமா மேடமுக்கு தெரிந்திருக்குமா ? அதெல்லாம் நிச்சயம் தெரிந்திருக்கும் என்றாள் தீபு. நம்முடைய நோக்கம் உண்மை குற்றவாளியை கண்டு பிடிப்பது. அந்த பெண்ணையும் கண்டுபிடித்தால்தான் முழு உண்மை தெரிய வரும் என்றான் ராம். ராம் சார் நீங்கள் எனக்கு பெரிய உதவி செய்திருக்கிறீர்கள். நான் நல்ல வேளையாக உங்களை பற்றி பிரேமா மேடத்திடம் எதுவும் சொல்லவில்லை. சரி ரொம்ப நேரம் இருக்க வேண்டாம். ஜானு நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான். இரவு முழுக்க ஒரே சிந்தனையாக இருந்தது.பிரேமா மேடம் இப்படி செய்திருப்பார்களா ? பணம் என்றால் இப்படி கூட செய்வார்களா . அவர்கள் பதவிக்கு ஒரு மரியாதை இல்லையா என பலவாறு சிந்தித்தாள் . எது எப்படியோ இந்த கேஸ் சம்பந்தப்பட்ட எல்லோரும் ஜெயிலுக்கு போவதை உறுதி செய்ய வேண்டும் என நினைத்தாள். ராம் அந்த பிரேமாவின் கணவர் பெயர் பரந்தாமன் என்பதை உறுதி செய்தான்.

ராம் தீபு இனிமேல்தான் நாம் முக்கியமான நபரை பின் தொடர போகிறோம் என்றான். யார் அது என்றான் . எஸ் ஐ பிரேமா. அவருடைய அக்கவுண்ட் செக் செய்ய வேண்டும். நம்மால் அது முடியுமா. நிச்சயம் முடியும், அதற்கென ஆட்கள் இருக்கிறார்கள்.அதன் பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும். பிரேமாவுக்கு பொதுவில் டிபார்ட்மெண்ட்டில் நல்ல பெயர். நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்திருந்தார். சின்ன சின்ன விஷயங்களில் காசு வாங்குவார் என்பதும் பரவலாக அறியப்பட்ட விஷயமாக இருந்தது. இரண்டு நாட்களில் பிரேமா அக்கவுண்ட் டீடெயில் வந்து விட்டது. எதிர்பார்த்த மாதிரி இரண்டு லட்ச ரூபாய் டெபாசிட் ஆகி இருந்தது. இதை ராம் எதிர்பார்த்திருந்தான். தீபு எதிர்பார்க்கவில்லை. என்ன சார் இப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கலை என்றாள். இந்நேரம் பரந்தாமனுக்கு சந்தேகம் வந்திருக்கும் . எப்படி சொல்லறீங்க. என்னவோ ஒரு உள்ளுணர்வு சொல்லுது. கொஞ்ச நாளைக்கு இந்த விவகாரத்தை ஒத்தி வைப்போம். ஜானுக்கிட்டே இதை பத்தி ஃபோன்ல பேச வேண்டாம்னு சொல்லு என்றான். சரி . அடுத்து ஒரு முக்கியமான வேலை இருக்கு. பரந்தாமன் கூட கடத்தல் விவகாரத்துல சம்பந்தப்பட்ட பொண்ணு யாரு அப்படின்னு தெரியணும்.


ஜானுவும் அதன் பிறகு ரம்யா விஷயத்தில் ஆர்வத்தை குறைத்து கொண்டதாக காட்டிக்கொண்டாள் . நிறைய பேரை பகைத்து கொள்ள வேண்டி வரும் என்பதால் ராமின் அறிவுரையை பின்பற்றினாள் . எப்போதும் போல டியூட்டி அது சம்பந்தமான பிரச்சனைகள் என நாட்கள் ஓடின. அன்று அந்த கால் வந்தது. பார்வதி ஃபோன் பண்ணியிருந்தாள். கொஞ்ச நாளா யாரோ என்னை ஃபாலோ பண்ணுற மாதிரி இருக்கு மேடம். எனக்கு பயமா இருக்கு என்றாள். யாராவது மறுபடி மிரட்டி ஃபோன் பன்னாங்களா ?இல்லை மேடம். ஆட்டோ ல தான் வராங்க வீடு வரைக்கும்.. அந்த ஆட்டோ நம்பர் சொல்ல முடியுமா. நான் மெசேஜ் பண்ணுறேன் மேடம். என் ஹஸ்பண்ட் கிட்டே விவாகரத்து கேட்டிருக்கேன் அதனால என் கூட யாரும் இல்ல. அம்மா மட்டும் தான் இருக்காங்க . நான் நாளைக்கு வந்து உங்களை பார்க்கிறேன். சரி மேடம். இது என்ன புது பிரச்சனை என்று ஜானு குழம்பினாள்.

மறுநாள் மாலை 5 மணிக்கு ஜானு பார்வதி வீட்டை அடைந்தாள் . பார்வதி வீட்டு காலிங் பெல் அடித்தாள் . வாங்க மேடம் அம்மா இல்லையா பால் வாங்க போயிருக்காங்க.உக்காருங்க மேடம் ஜூஸ் எதுவும் போடவா என்றாள். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் அந்த ஆட்டோ எங்கேயிருந்து உங்களை ஃபாலோ பண்ணினதா சொன்னீங்க. அது வந்து தேனாம்பேட்டைலேயிருந்து மேடம். சரி அந்த ஆட்டோ பத்தி விசாரிச்சதுல அது பரந்தாமன்
அப்படிங்கிறவரோட ஆட்டோ. அவருக்கும் உங்களுக்கும் ஏதாவது முன்பகை இருக்கா? அதெல்லாம் ஒண்ணும் இல்லை மேடம். இந்த பேரை இப்போதான் கேள்விப்படுறேன். நான் அப்படின்னா இன்னும் டீடெயில்டா விசாரித்து விட்டு சொல்கிறேன் என்றாள் ஜானு. சரி மேடம். இவ்வளவு தூரம் வந்ததுக்கு தாங்க்ஸ் என்றாள் பார்வதி. மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள் ஜானு. இந்த பரந்தாமன் இன்னும் என்னென்ன வேலைகள் செய்கிறாரோ எனவும் யோசித்தாள்.

ராம் நிச்சயம் பரந்தாமன் லேசுபட்ட ஆளில்லை என்றான். பார்வதி விஷயத்திலும் அவன் தலையீடு இருக்கிறது என்றாள் தீபு. வேறு வழியில்லை. சீக்கிரமே அவனுக்கு பொறி வைக்க வேண்டியதுதான் என்றான் ராம். அந்த ஆட்டோ ஜானுவை உரசுவது போல சென்றது, ஜானு சுதாரித்து விட்டாள். அவளுடைய டூ வீலர் சாய்ந்து விழ போனது. இந்த முறை அந்த ஆட்டோ திரும்ப வந்தது. ஜானு வண்டியை ஓரம் நிறுத்தினாள். ராமுக்கு கால் செய்தாள் அவசரமாக. நான் ஆபத்தில் இருக்கிறேன் ராம் சார். சீக்கிரம் வாங்க என்றாள். அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோவில் இருந்தவனின் கத்தி ஒன்று அவளது வயிற்று பகுதியில் பாய்ந்தது.ஜானு ரத்த வெள்ளத்தில் சரிந்தாள்.