Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

அக்னி ட்ராகனின் வாரிசு - 2

அக்னி ட்ராகனின் வாரிசு: 
இருளில் எரியும் ஒளி
Chapter இரண்டு – முதல் மோதல்

கல்லூரி வளாகம் வழக்கம்போல சத்தம், சிரிப்பு, கலாட்டா என்று இருந்தது. ஆனால் அந்த கூட்டத்தில் ஒரு விதமான அமைதியில்லா அலை இருந்தது. யாருக்கும் அது புரியவில்லை. ஆனால் ஒருத்தனுக்கு மட்டும் அது தெளிவாக உணரப்பட்டது.

சிவஆதிரன்.

அவன் நடந்து கொண்டே இருந்தான். அவன் கண்கள் சுற்றி பார்த்தது, ஆனா அவன் பார்வை எதையும் பார்க்கலை. அவன் உள்ளே ஏதோ நடந்து கொண்டிருந்தது.

டேய், என்னடா இப்படி silent ஆ போறே? கீர்த்தி அவன் பக்கத்தில் நடந்துகொண்டு கேட்டாள்.

எதுவுமில்லை, அவன் சொன்னான். ஆனால் அந்த வார்த்தை வெறும் பொய்.

அந்த நேரம்—அவன் காதில் ஒரு சத்தம்.

அவன் வந்துட்டான்.

சிவஆதிரன் திடீரென்று நின்றான்.

என்ன ஆயிற்று? கீர்த்தி கேட்டாள்.

நீ கேக்கலையா? அவன் மெதுவாக கேட்டான்.

என்ன?

யாரோ பேசுற மாதிரி.

கீர்த்தி அவனை சற்று கவலையோடு பார்த்தாள். டேய், நீ சரியா இருக்கியா?

அவன் பதில் சொல்லவில்லை.

அந்த நேரம் கல்லூரி மைதானத்தின் ஓரத்தில் நின்றிருந்த அந்த கருப்பு கோட் மனிதன் மெதுவாக முன்னே வந்தான். அவன் நடை சாதாரணமில்லை. அவன் நடக்கும் இடத்தில் காற்று itself குளிர்ந்தது.

அவன் கண்கள் சிவஆதிரனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது.

Finaly. அவன் மெதுவாக சொன்னான்.

சிவஆதிரனின் இதயம் வேகமாக அடித்தது. அவன் திரும்பிப் பார்த்தான்.

அந்த மனிதனை பார்த்தவுடன்—ஒரு வினாடி.

அவன் மூச்சு நின்றது.

நீ யாரு? சிவஆதிரன் கேட்டான்.

அவன் சிரித்தான். அந்த சிரிப்பில் உயிரே இல்ல.

நீங்க கேட்குறது late, அவன் சொன்னான். நான் நீண்ட நாளா உன்னை தேடி வந்திருக்கேன்.

கீர்த்தி இடையில் நின்றாள். Excuse me, யாரு நீங்க? எங்களுக்கு problem வேண்டாம்.

அவன் அவளை ஒரு நொடிக்கு பார்த்தான். அடுத்த நொடியில்—அவள் உடல் அசையாமல் நின்றது.

கீர்த்தி! சிவஆதிரன் கத்தினான்.

அவள் freze ஆகி நின்றாள். கண்கள் திறந்தே இருந்தது. ஆனா அவள் அசையவில்லை.

அவளை கவலைப்படாதே, அந்த மனிதன் சொன்னான். இது உன்னுக்கும் எனக்கும் நடக்கிற விஷயம்.

நீ என்ன பண்ணே? சிவஆதிரன் கோபத்துடன் கேட்டான்.

நான் எதுவும் செய்யல. உன் உலகம் தான் மெதுவாக உடைந்து கொண்டு இருக்கு.

அவன் கையை தூக்கினான்.

அந்த நேரம்—சுற்றிய காற்று கருங்கலர்ந்தது.

நிழல்கள் தரையில் இருந்து எழுந்தது போல தோன்றியது.

நீ யார் தெரியுமா? அவன் கேட்டான்.

சிவஆதிரன் கத்தினான், நான் யாருன்னு எனக்கே தெரியல! நீ சொல்லு!

அவன் சிரிப்பு பெருசாயிற்று.

நீ மனிதன் இல்ல.

அந்த ஒரு வார்த்தை—சிவஆதிரனின் உள்ளத்தை அதிரச்செய்தது.

அடுத்த நொடி—

அந்த மனிதன் வேகமாக முன் வந்தான்.

சிவஆதிரன் react செய்யும் முன்—அவன் கழுத்தைப் பிடித்து தூக்கினான்.

உன் உள்ளே இருக்கும் சக்தி. அது என்னோடது, அவன் கத்தினான்.

சிவஆதிரன் மூச்சு வாங்க போராடினான்.

அவன் கண்கள் சிவந்தது.

அவன் உள்ளே இருந்த அந்த சூடு—இப்போ வெடிக்க தயாராக இருந்தது.

விடு. அவன் மெதுவாக சொன்னான்.

என்ன? அந்த மனிதன் கேலி சிரிப்புடன் கேட்டான்.

விடு! இப்போ குரல் முழங்கியது.

அந்த நொடியில்—

சிவஆதிரனின் உடலிலிருந்து ஒரு வெப்ப அலை வெடித்தது.

அவன் கண்கள் முழுக்க தீ போல பிரகாசித்தது.

அவன் கையை உயர்த்தினான்.

திடீரென்று—. தீ அவன் கையிலிருந்து பாய்ந்தது.

அந்த மனிதன் பின்னால் தள்ளப்பட்டான்.

சுற்றியிருந்த தரை கருகியது.

கீர்த்தி மீண்டும் அசைந்தாள். அவள் தரையில் விழுந்தாள்.

சிவா. அவள் பயத்துடன் பார்த்தாள்.

அவன் அவளை பார்த்தான்.

ஆனா அது அவன் இல்லை.

அவன் கண்களில் மனித தன்மை இல்லை.

அது. வேறொரு உயிர்.

இது தான். அந்த மனிதன் மெதுவாக எழுந்தான்.

அவன் முகத்தில் ஒரு சிரிப்பு.

அக்னி ட்ராகனின் வாரிசு.

சிவஆதிரன் தலையை பிடித்துக்கொண்டான்.

இல்ல. நான் இல்லை.

நீ தான்! அவன் கத்தினான்.

அந்த நேரம்—

வானம் திடீரென்று இருண்டது.

ஒரு ஒளி கீற்று கீழே விழுந்தது.

அந்த ஒளிக்குள் இருந்து—ஒரு பெண்.

அவள் தரையை மெதுவாக தொட்டாள்.

அவள் கண்கள்—தீவிரம்.

அவள் கையில் ஒரு ஒளி வாள்.

இவனை நீ தொடக்கூடாது, அவள் குளிர்ந்த குரலில் சொன்னாள்.

அந்த கருப்பு கோட் மனிதன் அவளை பார்த்தான்.

அப்படியா? ஆஸ்த்ரியா உலகத்திலிருந்து நேரடியாக வர்றீங்களா?

அவள் சற்று முன் வந்தாள்.

நான் இங்க வந்தது போருக்கு இல்ல. அவனை காப்பாத்த.

சிவஆதிரன் அவளை பார்த்தான்.

நீ யாரு.

அவள் அவனை ஒரு நொடி பார்த்தாள்.

அந்த பார்வையில்—ஒரு விதமான நெருக்கம்.

நான் யார் என்பது முக்கியமில்லை, அவள் மெதுவாக சொன்னாள்.

நீ யார் என்பதை தெரிஞ்சுக்கணும்.

அந்த கருப்பு மனிதன் சிரித்தான்.

இது இன்னும் interesting ஆகுது.

அவன் கையை உயர்த்தினான்.

நிழல்கள் மீண்டும் எழுந்தது.

சிவஆதிரன் மெதுவாக எழுந்தான்.

அவன் கையை பார்த்தான்.

தீ இன்னும் எரிந்துகொண்டே இருந்தது.

அவன் மெதுவாக சிரித்தான்.

நான் யாருன்னு தெரியல.

அவன் தலையை உயர்த்தினான்.

ஆனா. நான் பயப்பட மாட்டேன்.

அவன் முன்னே நடந்தான்.

அந்த பெண் அவனை பார்த்தாள்.

அவள் கண்களில்—ஒரு நம்பிக்கை.

அந்த மனிதன் கத்தினான்.

அப்போ வா. உன் உண்மை என்னன்னு பார்க்கலாம்!

அந்த நொடியில்—

தீ, நிழல், ஒளி மூன்றும் மோதினது.

அது ஒரு சண்டை மட்டும் இல்ல.

அது ஒரு தொடக்கம்.

சிவஆதிரனின் வாழ்க்கை இனி ஒருபோதும் பழைய மாதிரி இருக்காது.

தீயின் அழைப்பு

காற்று itself நின்றது போல இருந்தது.

மைதானம் முழுக்க அமைதி. ஆனால் அந்த அமைதிக்குள் ஒரு வெடிப்பு பதுங்கி இருந்தது. தீ, நிழல், ஒளி—மூன்றும் ஒரே இடத்தில் மோத தயாராக நின்றது.

சிவஆதிரன் மெதுவாக முன்னே வந்தான். அவன் காலடி ஒலி கூட மாறி இருந்தது. அது ஒரு சாதாரண மனிதன் நடப்பது மாதிரி இல்ல. ஒவ்வொரு அடியும் தரையை அழுத்தும்.

அவன் கையில் இருந்த தீ மெதுவாக வடிவம் எடுக்க ஆரம்பிச்சது. அது வெறும் தீ இல்ல. அது உயிரோட இருந்தது போல.

நீ ready ஆ? அந்த ஒளி பெண் கேட்டாள்.

சிவஆதிரன் அவளை ஒரு நொடி பார்த்தான். நான் எதுக்காக ready ஆகணும்னு கூட தெரியல.

அவள் சிரிக்கல. அதான் உன்னோட பிரச்சனை. நீ யார் என்று தெரியாம இருக்குறது.

அப்படின்னா நீ சொல்லு! அவன் சத்தமாக சொன்னான்.

அந்த நேரம்—கருப்பு கோட் மனிதன் கைத்தட்டினான்.

Drama போதும்.

அவன் கையை சுழற்றினான்.

நிழல்கள் தரையிலிருந்து எழுந்தது. அவை மனித வடிவம் எடுத்தது. கண்கள் வெறும் வெள்ளை. உடம்பு கருப்பு புகை மாதிரி.

கீர்த்தி பயந்து பின்னால் நின்றாள். இது என்னடா.

பின்னாடி போ! சிவஆதிரன் கத்தினான்.

அவள் ஓடினாள். ஆனா அவள் கண்கள் அவனை விட்டு விலகவில்லை.

நீங்க பேசிக்கிட்டு இருக்கும்போது. நான் வேலை முடிச்சுடுவேன், அந்த மனிதன் சொன்னான்.

நிழல் உருவங்கள் ஒரே நேரத்தில் முன்னே பாய்ந்தது.

அந்த ஒளி பெண் தன் வாளை உயர்த்தினாள். ஒரு வளைவு—ஒளி வெட்டு. மூன்று நிழல்கள் உடனே சிதறின.

சிவஆதிரா! concentrate பண்ணு! அவள் கத்தினாள்.

என்ன concentrate? அவன் கத்தினான்.

ஒரு நிழல் அவனை பாய்ந்தது.

அவன் reflex ஆக கையை தூக்கினான்.

தீ வெடிச்சது.

அந்த நிழல் முழுக்க எரிஞ்சு சாம்பலாயிற்று.

சிவஆதிரன் தன்னையே பார்த்தான். நான் இதை பண்ணேனா.

இது ஆரம்பம் தான்! அந்த பெண் சொன்னாள்.

மேலும் நிழல்கள் வந்தது.

சிவஆதிரன் கண்களை மூடினான்.

அவன் உள்ளே அந்த சூடு மீண்டும் அதிகரிச்சது.

ஒரு குரல்.

என்ன acept பண்ணு.

அவன் கண்களை திறந்தான்.

இந்த முறை—அவன் தயக்கம் இல்லாமல் கையை முன்னே நீட்டினான்.

தீ அவன் கையிலிருந்து பாய்ந்து பல திசைகளில் பிரிந்தது. ஒவ்வொரு நிழலும் எரிஞ்சு மறைந்தது.

கீர்த்தி அதிர்ச்சியோடு பார்த்தாள். இவன். இதெல்லாம் எப்படி.

அந்த கருப்பு மனிதன் சிரிப்பை நிறுத்தினான்.

வேகமா கற்றுக்கிறே. நல்லது.

அவன் கையை உயர்த்தினான்.

இந்த முறை—ஒரு பெரிய நிழல் உருவம்.

மனிதன் அல்ல.

ஒரு மிருகம் போல. உயரம் இரண்டு மாடி.

அது கர்ஜித்தது.

தரையையே அதிரச்செய்தது.

சிவஆதிரன் ஒரு நொடிக்கு அசைந்தான்.

இது. என்னடா.

Shadow Beast, அந்த பெண் சொன்னாள். இதை நீ மட்டும் தான் நிறுத்த முடியும்.

ஏன் நான்தான்? அவன் கோபமா கேட்டான்.

ஏன்னா நீ தான்—"

அவள் வார்த்தை முடியும் முன் அந்த மிருகம் பாய்ந்தது.

சிவஆதிரன் தள்ளப்பட்டான்.

அவன் தரையில் உருண்டான்.

அவன் வாயிலிருந்து ரத்தம்.

கீர்த்தி கத்தினாள். சிவா!

அந்த பெண் அந்த மிருகத்துடன் சண்டை போட்டாள். ஒளி வாள், வேகமான அடி, ஆனா அந்த மிருகம் நின்றதே இல்லை.

இது போதாது. அவள் மெதுவாக சொன்னாள்.

சிவஆதிரன் மெதுவாக எழுந்தான்.

அவன் உடம்பு வலி.

ஆனா அவன் கண்களில் கோபம்.

என்னை யாரும் காப்பாத்த தேவையில்லை. அவன் சொன்னான்.

அவன் கையை தரையில் வைத்தான்.

நான் தான் என்ன காப்பாத்திக்கணும்.

அந்த நேரம்—தரையில் இருந்து தீ எழுந்தது.

மெல்ல. அவனை சுற்றி.

அவன் முழு உடலும் தீயால் சூழப்பட்டது.

கீர்த்தி பயந்து பின்னால் போனாள். இவன் எரிஞ்சுரானே.

ஆனா சிவஆதிரன் சிரித்தான்.

இது எனக்கு வலி இல்லை.

அவன் தலை தூக்கினான்.

அவன் கண்கள் முழுக்க தீ.

இது தான். நான்.

அவன் ஓடினான்.

மிருகத்தை நோக்கி.

அவன் குத்து—தீ வெடிப்பு.

மிருகம் பின்சென்றது.

மீண்டும்.

மீண்டும்.

ஒவ்வொரு அடியும்—தீ வெடிப்பு.

அந்த மிருகம் கர்ஜித்தது.

ஆனா அது பின்னால் நகர்ந்தது.

அந்த கருப்பு மனிதன் முதல் முறையாக serious ஆனான்.

இது இவ்வளவு சீக்கிரமா.

சிவஆதிரன் கத்தினான்.

ஒரு பெரிய தீ அலை அவன் கையிலிருந்து பாய்ந்தது.

மிருகம் முழுக்க எரிஞ்சு சிதறியது.

அமைதி.

மீண்டும்.

காற்று மட்டும்.

சிவஆதிரன் மூச்சு வாங்கினான்.

அவன் உடம்பு சோர்ந்து போயிருந்தது.

அவன் கீழே விழ போனான்.

அந்த பெண் அவனை பிடித்தாள்.

நீ அதிகமா use பண்ணிட்டே.

அவன் அவளை பார்த்தான்.

இப்போ சொல்லு. நான் யாரு.

அவள் மெதுவாக சிரித்தாள்.

நீ. ஒரு உலகத்தின் நம்பிக்கை.

அதெல்லாம் வேண்டாம். straight ஆ சொல்லு.

அவள் அவன் கண்களை நேராக பார்த்தாள்.

நீ தான் அக்னி ட்ராகனின் வாரிசு.

அந்த வார்த்தை காற்றில் நிலைத்தது.

கீர்த்தி மெதுவாக வந்தாள்.

இதெல்லாம் என்னடா நடக்குது.

சிவஆதிரன் சிரிச்சான்.

எனக்கும் தெரியல. ஆனா interesting ஆ இருக்கு.

அந்த பெண் கண்களை சுருக்கினாள். இது game இல்ல.

எனக்கு தெரியும், அவன் சொன்னான்.

அதான் நான் serious ஆ இல்ல.

அவள் சிரிக்காமல் இருந்தாலும்—அவள் கண்களில் ஒரு சிறிய ஒளி.

அந்த நேரம்—

கருப்பு மனிதன் மறைந்து கொண்டிருந்தான்.

இது முடிவு இல்ல. அவன் குரல் மட்டும் கேட்டது.

இது ஆரம்பம் தான். சிவஆதிரா.

அவன் முழுக்க மறைந்தான்.

அமைதி.

சிவஆதிரன் வானத்தை பார்த்தான்.

சரி.

அவன் மெதுவாக சொன்னான்.

நான் யாருன்னு கண்டுபிடிக்கணும் போல இருக்கே.

அவன் சிரித்தான்.

அப்போ. adventure ஆரம்பம்.

அந்த பெண் அவனை பார்த்தாள்.

இது adventure இல்ல. போர்.

சிவஆதிரன் தோளை குலுக்கினான்

அப்படின்னா. இன்னும் beter.
மறைந்த உலகத்தின் கதவு

மாலை நேரம்.

சூரியன் மறையும் நேரத்தில் வானம் ஆரஞ்சு நிறத்தில் எரிந்தது. அது ஒரு சாதாரண சூரிய அஸ்தமனம் மாதிரி இல்ல. சிவஆதிரன் கண்ணுக்கு அது வேற மாதிரி தோன்றியது.

“இது. தீ மாதிரி இருக்கே. ”

அவன் மெதுவாக சொன்னான்.

கீர்த்தி அவன் பக்கத்தில் நின்று அவனை பார்த்தாள். “நீ இப்போ எல்லாத்தையும் தீயா தான் பார்ப்பியா? ”

சிவஆதிரன் சிரிச்சான். “அது என் fault இல்ல. என் life தான் இப்போ ful fire. ”

“ஹா ஹா. comedy பண்ணுற நேரமா இது? ” அவள் கண்களை சுருக்கினாள்.

அந்த ஒளி பெண் அமைதியாக முன்னால் நின்று கொண்டிருந்தாள். அவள் பார்வை வானத்தை தாண்டி எதையோ நோக்கி இருந்தது.

“நேரம் ஆகுது, ” அவள் மெதுவாக சொன்னாள்.

“எதுக்கு? ” சிவஆதிரன் கேட்டான்.

அவள் திரும்பி அவனை பார்த்தாள். “உன்னோட உண்மை உலகத்துக்கு போக. ”

கீர்த்தி உடனே, “என்ன? இன்னொரு world ஆ? ” என்றாள்.

“ஆமாம், ” அவள் சொன்னாள். “இந்த உலகம் மட்டும் இல்ல. இன்னொரு உலகம் இருக்கு. அங்க தான் நீ belong பண்ணுற. ”

“நான் இங்க தான் born ஆனேனே! ” சிவஆதிரன் சற்று கோபமாக சொன்னான்.

“உடம்பு இங்க born ஆகலாம், ” அவள் அமைதியாக சொன்னாள். “ஆனா உன் சக்தி. அது இங்க இல்ல. ”

அவன் அமைதியாக நின்றான்.

அந்த வார்த்தை அவன் உள்ளே ஏதோ பதிந்தது.

“அப்படின்னா. ” அவன் மெதுவாக கேட்டான். “நான் அங்க போனா. எல்லாம் தெரிஞ்சுக்கலாமா? ”

“அதுக்குத்தான் நீ போகணும். ”

கீர்த்தி உடனே, “நானும் வர்றேன்! ” என்றாள்.

இருவரும் அவளை பார்த்தாங்க.

“இது picnic இல்ல, ” அந்த பெண் சொன்னாள்.

“எனக்கு care இல்ல, ” கீர்த்தி சொன்னாள். “அவன் போறான்னா நானும் போறேன். ”

சிவஆதிரன் சிரிச்சான். “நீ இல்லாம நான் போவேனா? ”

அந்த பெண் சற்று யோசித்தாள்.

“சரி. ஆனா நீங்க இருவரும் என் rules folow பண்ணணும். ”

“Rules ஆ? ” சிவஆதிரன் eyebrow உயர்த்தினான். “நான் rule break பண்ணதுக்குத்தான் famous. ”

“அங்க rule break பண்ணினா. உயிரே போகும், ” அவள் குளிர்ந்த குரலில் சொன்னாள்.

ஒரு நிமிடம் அமைதி.

“சரி. நான் நல்ல பையன் மாதிரி இருப்பேன், ” சிவஆதிரன் சிரிச்சான்.

“அது தான் நான் பயப்படுறது, ” கீர்த்தி மெதுவா muter பண்ணினாள்.

அந்த பெண் கையை உயர்த்தினாள்.

அவள் கை விரல்களுக்குள் இருந்து ஒளி வெளியேற ஆரம்பிச்சது.

மெல்ல. அவள் முன்னால் ஒரு வட்டம் உருவானது.

ஒளி வட்டம்.

அது மெதுவாக பெருசாயிற்று.

அதன் உள்ளே—ஒரு வேறு உலகம்.

மலைகள். மிதக்கும் தீ. வானத்தில் பறக்கும் டிராகன்கள்.

கீர்த்தி வாயை திறந்து பார்த்தாள். “இது. இது real ஆ? ”

சிவஆதிரன் அமைதியா அந்த காட்சியை பார்த்தான்.

அவன் உள்ளே ஏதோ ஒரு உணர்வு.

“இது. எனக்கு தெரிஞ்ச மாதிரி இருக்கு. ”

அவன் முன்னே நடந்தான்.

அந்த பெண் அவனை பார்த்தாள். “நினைவுகள் மெதுவா திரும்பி வருது. ”

“நான் இங்க முன்னாடி வந்திருக்கேனா? ” அவன் கேட்டான்.

அவள் பதில் சொல்லல.

அவள் கண்களில் மட்டும் ஒரு ரகசியம்.

“வாங்க, ” அவள் சொன்னாள்.

மூவரும் அந்த ஒளி வட்டத்துக்குள் நுழைந்தார்கள்.

ஒரு நொடி—

எதுவும் தெரியல.

அடுத்த நொடி—

அவர்கள் வேறு உலகத்தில்.

காற்று itself மாறி இருந்தது.

அது சூடாக இருந்தது. ஆனா அது சுடவில்லை.

தரையில் கருப்பு கல்.

தூரத்தில்—ஒரு பெரிய மலை.

அதின் மேல தீ.

“இது தான். ” அந்த பெண் மெதுவாக சொன்னாள். “ஆஸ்த்ரியா. ”

கீர்த்தி சுற்றி பார்த்தாள். “என்னடா இது. game மாதிரி இருக்கு. ”

அந்த நேரம்—ஒரு கர்ஜனை.

வானத்தில் இருந்து ஒரு பெரிய டிராகன் பறந்து சென்றது.

அதன் நிழல் மூவரையும் மூடியது.

கீர்த்தி உடனே சிவஆதிரனின் பின்னால் மறைந்தாள். “நான் வீட்டுக்கு போகணும். ”

சிவஆதிரன் சிரிச்சான். “இப்போ தான் வந்தோம். ”

அவன் அந்த டிராகனை பார்த்தான்.

அவன் கண்களில் பயம் இல்ல.

ஆச்சரியம் மட்டும்.

“இது தான் என் world ஆ. ”

அவன் மெதுவா சொன்னான்.

அந்த பெண் அவனை பார்த்தாள்.

“இல்ல. இது ஆரம்பம் தான். ”

அந்த நேரம்—

அந்த மலை மேல் இருந்த தீ திடீரென்று அதிகமாயிற்று.

ஒரு ஒளி.

அந்த ஒளிக்குள்—ஒரு உருவம்.

பெரிய டிராகன்.

அது மெதுவாக கண்களை திறந்தது.

அது நேராக சிவஆதிரனை பார்த்தது.

அவன் இதயம் தடுக்கிற மாதிரி இருந்தது.

“அது. ” அவன் மெதுவா சொன்னான்.

அந்த பெண் தலையை குனிந்தாள்.

“அக்னி ட்ராகன். ”

கீர்த்தி almost faint ஆக போனாள். “நான் இங்க இருக்கவே கூடாது. ”

சிவஆதிரன் ஒரு அடியை முன்னே வைத்தான்.

அந்த டிராகன் கர்ஜித்தது.

ஆனா அந்த கர்ஜனையில் கோபம் இல்ல.

அது. அழைப்பு.

சிவஆதிரன் கண்களை மூடினான்.

அவன் உள்ளே ஒரு குரல்.

“வா. ”

அவன் கண்களை திறந்தான்.

“அது என்னை கூப்பிடுது. ”

அவன் சொன்னான்.

“ஆமாம், ” அந்த பெண் சொன்னாள். “அது உன்னை தான் காத்திருக்குது. ”

சிவஆதிரன் சிரிச்சான்.

“சரி. ”

அவன் முன்னே நடந்தான்.

“நான் வர்றேன். ”

கீர்த்தி கத்தினாள். “டேய்! careful ஆ போ! ”

அவன் திரும்பி பார்த்தான்.

“நான் எப்போ careful ஆ இருந்தேனா? ”

அவன் சிரிச்சான்.

அந்த பெண் அவனை பார்த்தாள்.

அவள் மனசுக்குள் ஒரு thought.

“இவன் தான். நம்பிக்கை. இல்ல. அழிவு. ”

சிவஆதிரன் அந்த மலைக்குச் சென்றான்.

ஒவ்வொரு அடியும்—அவனுடைய வாழ்க்கையை மாற்றப் போகும்.

அந்த டிராகன் கண்கள்—அவனை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தது.

ஒரு வாரிசு.

தன் உண்மையை சந்திக்க போகிறான்.